அடுத்த முறை வீடியோ வெளியிட நான் உயிரோடு இருக்கமாட்டேன்..! நித்தியின் செல்லமான பெண் சீடர் பகீர் வீடியோ!

உயிருக்கு ஆபத்து என்று தாம் வெளியிட்ட வீடியோவானது 1.5 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிடப்பட்டது என்று தத்துவ பிரியாநந்தா கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபர் ஜனார்தன சர்மா. இவர் தன்னுடைய 3 மகள்கள் மற்றும் ஒரு மகனை நித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் சேர்த்தார். இதனிடையே குழந்தைகளை குஜராத்தில் உள்ள ஆசிரமத்திற்கு கடத்தி சென்று விட்டதாக கூறி ஜனார்தன சர்மா பெங்களூரு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

ஆசிரமத்தை காவல்துறையினர் சோதனை செய்தபோது ஒரு மகள் மட்டுமே இருந்துள்ளார். அவரை காவல்துறையினர் மீட்டெடுத்தனர். மூத்த மகள் லோபமுத்ரா என்ற தத்துவ பிரியாநந்தா மற்றும் இளைய மகள் நந்திதாவை காவல்துறையால் கண்டுபிடிக்க இயலவில்லை.

இதனால் அதிர்ச்சிக்கு ஆளான ஜனா சர்மா குஜராத் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். இந்நிலையில் 2 மகள்களும் திடீரென்று ஒரு வீடியோவை வெளியிட்டனர். அந்த வீடியோவில் தங்களுடைய தந்தையால் தங்களின் உயிருக்கு ஆபத்துள்ளதாக கூறியிருந்தனர். ஆனால் இதனை குஜராத் நீதிமன்றம் ஒப்புக்கொள்ளவில்லை. அவர்கள் மேற்கிந்திய தீவுகள் நாட்டிலுள்ள பார்படாஸ் தீவில் தங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகின. 

இந்நிலையில் தத்துவ ப்ரியானந்தா வெளியிட்ட ஒரு வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது "என் உயிருக்கு பேராபத்து உள்ளது. நான் அடுத்த வீடியோ வெளியிடுவதற்கும் உயிரோடு இருப்பேனா இல்லையா என்பது எனக்கு தெரியாது" என்று அவர் வீடியோவில் கூறியிருந்தார்.

இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. இதனிடையே தத்துவப்படி ஆனந்த தற்போது மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதாவது சமூக வலைதளங்களில் வைரலாகி வந்த வீடியோ புதிதல்ல என்றும், 1.5 ஆண்டுகளுக்கு முன்னால் எடுக்கப்பட்ட வீடியோ வேண்டும் அவர் கூறியுள்ளார்.

வீடியோவானது சமூக வலைத்தளங்களில் பெரிதும் வைரலாகி வருகிறது. நித்யானந்தாவை கைது செய்வதற்கும், ஜனார்தன சர்மாவின் மகள்களை மீட்டெடுப்பதற்கும் குஜராத் காவல்துறையினர் முயற்சி செய்து வருகின்றனர்.