தல 60! 13 வருடங்களுக்கு பிறகு அஜித்துடன் இணைந்த ஏ.ஆர்.ரஹ்மான்! தெறி அப்டேட்!

13 ஆண்டுகளுக்குப் பிறகு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான், தல அஜித் நடிக்கும் புதிய படத்தில் இசையமைக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது .


போனி கபூரின் தயாரிப்பில் H.வினோத்தின் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வருகிற ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி  நேர்கொண்ட பார்வை திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது .

நேர்கொண்ட பார்வை திரைப்படத்திற்கு பிறகு அஜித் மீண்டும் போனிகபூரின் தயாரிப்பில் வினோத்தின் இயக்கத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார் . இந்த படத்தின் பூஜை வருகிற ஆகஸ்ட் மாதத்தின் இறுதியில் போடப்படும் என்று அந்த படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் நேற்று ட்விட்டரில் அறிவித்திருந்தார் .

மேலும் இந்த திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசை அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது . இந்த திரைப்படத்தின் மூலம் நடிகர் அஜித் மற்றும் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் 13 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைய உள்ளனர் .

13 வருடங்களுக்கு முன்னால் வெளிவந்த  வரலாறு படத்தில் அஜித் மற்றும் ஏ ஆர் ரகுமான் இணைந்து பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது .