அதர்வாவுக்கு வந்த திடீர் சிக்கல்! டென்சனில் ஹன்சிகா! என்னாச்சு தெரியுமா?

நடிகர் அதர்வா – ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள 100 படத்தை வெளியிட உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது அதர்வாவின் நூறு திரைப்படம், மே 3ம் தேதி வெளியாக இருந்தது.


இந்த நிலையில் 100 படத்தை தயாரித்துள்ள எம்.ஜி.ஆரா சினிமாஸ் நிறுவனத்தின் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் 70mm என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

பலூன் திரைப்படத்தின் வெளியீட்டு உரிமையை தங்களிடம் இருந்து பெற்ற எம்ஜி ஆரா நிறுவனம் ஒரு கோடி ரூபாய் பாக்கியை கொடுக்காமல் 100 படத்தை வெளியிடக்கூடாது என்று அந்த வழக்கில் 70 எம்எம் நிறுவனம் தெரிவித்தது.  இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், நூறு படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

 மேலும் , எம் ஜி ஆரா சினிமாஸ் நிறுவன இயக்குனர் மகேஷ், காவ்யா வேணுகோபால் ஆகியோர் பணப்பாக்கி தொடர்பாக விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.  பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த படத்திற்காக காத்திருந்த அதர்வா படம் வெளியாகாது என்பதால் சிக்கலில் சிக்கியுள்ளார்.

இதே போல் ஹன்சிகா நடித்து நீண்ட நாட்களாக எந்த படமும் வெளியாகவில்லை. 100 வெளியாகி தனக்கு பெயர் கிடைக்கும் என எதிர்பார்த்த அவருக்கும் படத்திற்கு விதிக்கப்பட்ட தடை டென்சனை ஏற்படுத்தியுள்ளது.