தட்டில் விழும் காணிக்கை இனி உங்களுக்கு இல்லை! ஐயர்களுக்கு அரசு வைத்த அதிரடி செக்!

கர்நாடக மாநிலத்தில் அம்மாநில அரசு கோவில்களுக்கு ஒரு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.


அந்த உத்தரவின்படி கோவிலில் அர்ச்சனை தட்டில் பக்தர்கள் இடம் காணிக்கைகளை அர்ச்சகர்கள் எடுத்துக் கொள்ளக்கூடாது அதை கோவில் கணக்கில் சேர்க்க வேண்டும்.என ஒரு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் சுமார் 30 ஆயிரத்திற்கும் அதிகமான கோவில்கள் உள்ளன. அதில் பணியாற்றி வரும் கோவில் அர்ச்சகர்கள் ஊதிய உயர்வு குறித்து கர்நாடக அரசிடம் பல முறை மனு கொடுத்து வந்துள்ளனர்.

தங்களுக்கு ஊதிய உயர்வு  வேண்டுமென பலமுறை இந்து சமய அறநிலையத்துறையில் கோரிக்கையும் வைத்துள்ளனர். இதன் அடிப்படையில் அம்மாநில அரசு 6 வது ஊதிய உயர்வு கொள்கை அடிப்படையில் அர்ச்சகர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

அதே சமயம் கோவில்களுக்கு வரும் பக்தர்கள் காணிக்கை தட்டில் இடம் காணிக்கைகளை கோவில் அர்ச்சகர்கள் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது எனவும் அதை கோவிலுக்கு வரும் வருமானத்தில் சேர்த்துவிட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

கோவில்களில் உள்ள உண்டியல்களில் காணிக்கைகளை போடுமாறும் பக்தர்களுக்கு வலியுறுத்த வேண்டும். மீறி அர்ச்சனை தட்டுகளில் போடப்படும் காணிக்கைகள் கோவிலுக்கு அளிக்க வேண்டும் எனவும் அரசாணை வெளியிட்டுயுள்ளனர்.