சர்க்கரை நோய் தீர்க்கும் வெணிகரும்பேஸ்வரர்! இவரை கும்பிட்டால் சர்க்கரை கட்டுப்படும் அதிசயம்

உலகில் மிக அதிகமானோரை பாதித்திருக்கும் நோய் சர்க்கரை நோய் எனப்படும் நீரழிவு நோய்.


அப்படிப்பட்ட சர்க்கரை வியாதியை போக்கக் கூடிய கோயிலாக உள்ளது திருவாரூரில் உள்ள வெண்ணிகரும்பேஸ்வரர் கோயில். திருவாரூர், நீடாமங்கலம் அருகே கோவில்வெண்ணி என்ற இடத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.

வித்தியாசமான சிவ தலங்களில் வெண்ணிகரும்பேஸ்வரர் திருக்கோயிலும் ஒன்றாக உள்ளது. வெண்ணிகரும்பேஸ்வரர் சிவ லிங்கம் கரும்புக்கழிகளை ஒன்றாக சேர்த்து கட்டி வைத்தார் போல் உள்ளது.

உலகில் மிக அதிகமானோர் பாதித்திருக்கும் நோய் சர்க்கரை நோய் எனப்படும் நீரழிவு நோய். இன்சுலின் எனும் சுரப்பியில் ஏற்படும் குறைபாடு காரணமாக இந்த நோய் ஏற்படுகிறது. இந்த நோயிலிருந்து முற்றிலும் குணப்படுத்த முடியாது. கட்டுப்படுத்த முடியும். தொடர்ந்து மருந்துவர்கள் கொடுக்கும் மருந்து சாப்பிட்டு வர அதை கட்டுக்குள் வைக்கலாம் என்கின்றனர்.

மருத்துவர்களை தாண்டி உள்ளது தான் கடவுள் மீது உள்ள நம்பிக்கை. அந்த வகையில் திருவெண்ணியூரில் உள்ள வெண்ணிக்கரும்பர் கரும்பேஸ்வரரை வழிபட்டால் சர்க்கரை வியாதியிலிருந்து விடுபடலாம் என நம்பப்படுகிறது.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த கோயிலில் சர்க்கரை மற்றும் ரவையை சேர்த்து வெண்ணிகரும்பேஸ்வரருக்கு அர்ச்சனை செய்து பிரகாரத்தை வலம் வந்து பின்னர் பிரகாரத்தில் தூவினால், சர்க்கரையை மட்டும் எறும்புகள் தின்று விட்டால், அவர்களுக்கு உடனே சர்க்கரை நோய் குறைவதாக ஐதீகம்.

வேண்டுதல் நிறைவேறினால் இங்கு வந்து சர்க்கரைப் பொங்கல் படைத்து தன் நேர்த்திகடனை தீர்க்கின்றனர்.