சாதனை படைத்த இந்திய டாக்டர்கள்! புற்று நோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கும் அதிநவீன தொழில்நுட்பம் உருவாக்கம்!

புனே: புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறியும் தொழில்நுட்பத்தை இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.


புற்றுநோய் ஆரம்பித்து, சில நிமிடங்களிலேயே அது எப்படி பரவுகிறது என்பதை கண்டறியும்  தொழில்நுட்பத்தை இந்திய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். டாக்டர் ஜெயந்த் கந்தாரே தலைமையிலான இந்திய விஞ்ஞானிகள் குழு இதுபற்றி ஆய்வு செய்து, OncoDiscover என்ற பெயரில் தொழில்நுட்பம்  கண்டறிந்துள்ளது.

இதனை பயன்படுத்தி புற்றுநோய் ஏற்பட்டு முதல் 12 மணி நாட்களில், ஆரம்ப நிலையிலேயே  3.5 மணிநேரத்திற்குள் ஆய்வு செய்து, கண்டுபிடித்துவிடலாம். இதுதொடர்பாக, செய்தியாளர்களிடம் டாக்டர் கந்தாரே கூறுகையில், ''உலக அளவில்புற்றுநோய் பரவி வருகிறது. இதனால், பெரும்பாலான மக்களிடம் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை, ஏற்படுத்த முடியும்.

இந்தியாவிலேயே இத்தகைய தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்படுவது இதுதான் முதல்முறையாகும். உலக அளவில் இது 2வது முறையாகும். 
புனேவில் நடைபெற்ற இந்த ஆராய்ச்சிப் பணியை பார்ப்பதற்காக, வங்கதேசம், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் நேரில் வந்து, பாராட்டு தெரிவித்தனர்,'' என்றார்.