ஒவ்வொருத்தரா வாங்க..! மாணவிகளை தனியாக அழைத்து ஆபாச படம் காட்டிய காமுக ஆசிரியர்! ஒரத்தநாடு அதிர்ச்சி!

பள்ளி மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய ஆசிரியர் காவல்துறையிடம் சிக்கியிருப்பது தஞ்சை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு என்னும் பகுதி அமைந்துள்ளது. இதற்கு அருகே உள்ள திருவோணம் என்னும் பகுதியில் இருபாலர் பயிலும் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த 30 வயதான சாரங்கபாணி என்ற இளைஞர் 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்புவரை ஆசிரியராக பணியாற்றி கொண்டிருந்தார்.

சில மாதங்களுக்கு முன்னர் இவர் சில மாணவிகளை தனியாக அழைத்து சென்று பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து பெற்றோர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு வந்து கூச்சலிட்டனர். உடனடியாக பள்ளி நிர்வாகத்தினர் அவரை பத்திரமாக இடமாற்றம் செய்து வைத்தனர்.

ஆனால் சாரங்கபாணி தன்னுடைய முழு செல்வாக்கையும் பயன்படுத்தி அடுத்த சில நாட்களிலேயே மீண்டும் திருவோணம் அரசு மேல்நிலை பள்ளிக்கு ஆசிரியராக பணியாற்றும் உரிமத்தை பெற்றார். இதை கேள்விப்பட்டவுடன் புகார் அளித்த பெற்றோர் ஆவேசம் அடைந்தனர். பெற்றோர்கள் நிறைய பேர் காவல் நிலையத்தில் வாயிலுக்கு வந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நிலைமையை சமாளிக்க முடியாததால் பள்ளி நிர்வாகத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சமரசம் செய்து வைக்க முயன்றனர். ஆனால் இயலவில்லை. இந்நிலையில், ஆசிரியர் மீது எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதியளித்தனர்.

அப்போது அதே பள்ளியில் பயிலும் மாணவி ஒருவர், தங்களை தனியாக அழைத்து சென்று செல்போன்களில் ஆபாச படம் பார்க்க சாரங்கபாணி வற்புறுத்தியதாக புகார் அளித்தார். மேலும் பள்ளியின் தலைமையாசிரியர் சாரங்கபாணி போது தனிப்பட்ட முறையில் புகார் ஒன்றை அளித்தார். அதாவது நடவடிக்கையையும் எடுக்க முயன்றபோது தன்னை கொன்று விடுவதாக சாரங்கபாணி மிரட்டியதாக கூறியுள்ளார்.

இந்த 2 வழக்குகளையும் பெற்றுக்கொண்ட காவல்துறையினர், விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில் சாரங்கபாணி எது தவறு என்பதை கண்டறிந்த காவல்துறையினர் அவரை போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 

இந்த சம்பவமானது ஒரத்தநாடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.