17 வயது மாணவனுடன் உடல் ரீதியிலான நெருக்கம்..! கண்டுபிடிக்கப்பட்டதால் 63 வயது ஆசிரியைக்கு நேர்ந்த விபரீதம்! அதிர்ச்சி சம்பவம்!

பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்த ஆசிரியை கணவருடன் இறந்து கிடந்த சம்பவமானது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அமெரிக்காவில் வடக்கு கரோலினா மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்திற்குட்பட்ட ஹண்டர்ஸ்வில் பகுதியை சேர்ந்தவர் எம்மா ஓக்லி. இவருடைய வயது 63. இவருடைய கணவரின் பெயர் மைக்கேல் ஓக்லி. இவர் கேரின்ஜர் மேல்நிலை பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

எம்மா ஓக்லி பள்ளியில் 17 வயது மாணவன் ஒருவனுடன் மிகவும் நெருக்கமாக இருந்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டதில் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பள்ளி நிர்வாகம் சென்ற வியாழக்கிழமையன்று எம்மாவை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது.

இதனிடையே கணவன் மனைவி இருவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடந்தனர். நேற்று காலை உறவினர் ஒருவர் இவர்களது வீட்டிற்கு சென்றுள்ளார். வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருப்பினும், யாரும் பதில் கூறவில்லை. இதனால் சந்தேகமடைந்த உறவினர் அப்பகுதி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

காவல்துறை அதிகாரிகள் விரைந்து வந்து வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது, இருவரும் குண்டடிபட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளனர். அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் இருவரது உடலையும் பிரேத பரிசோதனைக்காக  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இருவரும் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டனரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.