கணவனுடன் தாம்பத்யம் வச்சிக்காத..! புதுப் பெண்ணுக்கு சமூக ஆர்வலரின் விபரீத அட்வைஸ்! பிறகு அரங்கேறிய பரபரப்பு சம்பவம்!

தொண்டு நிறுவனம் நடத்துவதாக கூறி திருமணமான இளம் பெண்ணை கணவருடன் வாழாமல் பிரிக்க முயற்சி செய்த தங்கமணி என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


ஈரோடு மாவட்டம் தொராயன்மலை பகுதியிலுள்ள சென்னிமலையை சேர்ந்தவர் தங்கமணி. தங்கமணிக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். சுபாஷ் தொண்டு நிறுவனம் நடத்தி வருவதாக கூறி பல இளம் பெண்களை தன்னுடைய வாட்ஸ்அப் குரூப்பில் இணைத்துள்ளார். அந்த வகையில் தன்னுடைய வீட்டின் அருகில் வசித்து வந்த இளம் பெண் ஒருவரை தன் வலையில் சிக்க வைத்துள்ளார் தங்கமணி.

அந்த இளம்பெண்ணிடம் தங்கமணி நல்லவர் போல் நடிக்க பழகி வந்துள்ளார். அதற்கு பின்பு சிறிது நாட்களுக்கு பின்பு அந்த இளம் பெண்ணிற்கு அவரது பெற்றோர் திருமணத்திற்காக வரன் தேடியுள்ளனர். சென்னை பொன்னியம்மன் மேட்டில் உள்ள வெங்கடேசன் என்பவரை திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர்.

இது அந்தப் பெண்ணுக்கும் வெங்கடேசனுக்கு திருமணம் முடிந்து விட்டால் அந்தப் பெண் ஈரோடை விட்டு சென்னைக்கு குடியேறி விடுவார் என்ற காரணத்திற்காக திருமணத்தை நிறுத்துவதற்காக தங்கமணி முடிவு செய்து பல சதித் திட்டங்களை தீட்டி உள்ளார். இதனையடுத்து மாப்பிள்ளை வீட்டாரிடம் போன் செய்து அந்த பெண்ணை பற்றிய தவறான தகவல்களை பரப்பி உள்ளார்.

அதேபோல் பெண்வீட்டார் இடமும் வெங்கடேசனை பற்றி தவறான கருத்துக்களையும் கூறியுள்ளார் தங்கமணி . இதனை எதையுமே நம்பாத வெங்கடேசன் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள சம்மதித்து இருவரது திருமணமும் இரு வீட்டாரின் சம்மதத்துடன் நல்லபடியாக நடந்து முடிந்தது. திருமணம் முடிந்த பின்னும் அந்த இளம்பெண்ணை தன் கணவரோடு வாழ விடாமல் தடுக்க வேண்டும் என்று எண்ணிய தங்கமணி தினமும் இரவு நேரத்தில் அந்த இளம் பெண்ணிற்கு கால் செய்து நீண்ட நேரம் உரையாடுவார் . ஆகையால் வெங்கடேசன் தன் மனைவி மீது கோபம் கொண்டு அவர்கள் இருவரும் பிரிந்து விடுவர் என்று திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. 

இந்த செய்கையால் ஆத்திரமடைந்த வெங்கடேசன் அவரது மனைவியிடம் இனிமேல் தங்கமணியை கூட போனில் பேசக்கூடாது என்று கண்டித்துள்ளார் இதனையடுத்து தங்கமணியின் போன் கால்களை எடுக்காமல் நிராகரித்துள்ளார் அந்த இளம்பெண். இதனையடுத்து அந்த பெண்ணை நேரில் சந்திப்பதற்காக ஈரோட்டில் இருந்து சென்னைக்கு கிளம்பி வந்துள்ளார் தங்கமணி.

நேரில் சந்தித்து வெங்கடேசனிடம் நான் அந்த பெண்ணிற்கு அப்பா மாதிரி என்று கூறி அவர்கள் இருவரையும் தேனிலவுக்கு தான் அழைத்துச் செல்லப் போவதாகவும் கூறி தன்னுடைய காரில் ஏறுமாறு கூறியுள்ளார். தங்கமணியின் பேச்சை நம்பி வெங்கடேசனும் அவரது மனைவியும் காரில் புறப்பட்டு சென்றுள்ளனர். 

தேன் நிலவுக்கு சென்ற இடத்திலும் அந்த இளம்பெண்ணை தன் கணவரோடு ஒன்றாக வாழ விடக்கூடாது என்று எண்ணி அந்த பெண்ணுடன் நீண்ட நேரம் தனியாக உரையாடி கொண்டிருந்திருக்கிறார் தங்கமணி . இதனைப் பார்த்த வெங்கடேஷன் ஆத்திரமடைந்து தன் மனைவியை அழைத்துக் கொண்டு சென்னைக்கு திரும்பியுள்ளார்.

இதோடு தன் செயலை நிறுத்தி கொள்ளாத தங்கமணி மீண்டும் வந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்து அவரை கடத்தவும் முயன்றுள்ளார். கடந்த வியாழக்கிழமையன்று தங்கமணி அவரது கூட்டாளியை அழைத்துக் கொண்டு மீண்டும் அந்த இளம்பெண்ணை சென்னையிலுள்ள அவரது கணவர் வீட்டிலிருந்து கடத்துவதற்கு திட்டமிட்டுள்ளார்.

அதன்படி அவரது கணவர் வீட்டின் முன் நின்று கொண்டு அந்தப் பெண்ணை வீட்டிற்கு வெளியே வர செய்துள்ளார் உடனே அந்த பெண்ணை தன்னுடைய காரில் கடத்த முயன்றுள்ளார் போது அதனை பார்த்த அந்த பெண்ணின் கணவர் இது உன் உறவினர்கள் உடனே அந்த காரை சுற்றி வளைத்து தங்கமணி மற்றும் அவரது கூட்டாளியான பாலாஜி ஆகிய இருவரையும் பிடித்துள்ளனர்.

இதற்கு பின்பு தகவலறிந்து வந்த போலீசார் பாலாஜியும் தங்கமணியும் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர். தற்போது இவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தங்கமணி தொண்டு நிறுவனம் நடத்துவதாக கூறி பல இளம்பெண்களை ஏமாற்றி உள்ளார் என்பதும் அம்பலமாகியுள்ளது.

சமூக ஆர்வலர் என்ற பெயரில் பெண்களுக்கு எதிராக பல ஆண்கள் தற்போது இந்த மாதிரியான செயல்களில் தான் ஈடுபட்டு வருகின்றனர் இதனை கருத்தில் கொண்டு பெண்கள் முன்பின் அனுபவமில்லாத அவர்களிடம் சற்று எச்சரிக்கையுடன் பழகுவது நல்லது.