பணம் மட்டும் போதாது..! அதுவும் வேண்டும்..! டிமாண்ட் செய்த சுஜித் குடும்பத்தினர்..! ஷாக் ஆன கலெக்டர்!

ஆழ்துளை கிணற்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சிறுவன் சுர்ஜித்தின் உடல் திசுக்கள் தற்போது டிஎன்ஏ ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை அருகே அமைந்துள்ள நடுக்காட்டுபட்டி என்ற கிராமத்தில் பிரிட்டோ - கலாமேரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். பிரிட்டோ தோட்டத்துடன் அமைந்த வீடு ஒன்றை அப்பகுதியில் விலைக்கு வாங்கியுள்ளார். அந்த தோட்டத்தில் விளையும் சோள காட்டிற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக ஆழ்துளை கிணறு ஒன்றை அமைத்தார். நீண்ட நாட்களாக உபயோகப் படுத்தப் படாமல் வைத்திருந்த ஆழ்துளை கிணற்றில் கடந்த 25 ஆம் தேதி, மாலை 5:30 மணி அளவில் பிரிட்டோவின் இளைய மகன் சுர்ஜித் (2 வயது ) உள்ளே விழுந்து விட்டான். உள்ளே விழுந்த சிறுவன் சுஜித்தை உயிருடன் காப்பாற்றுவதற்காக தமிழ் நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து மீட்பு குழுவினர் மற்றும் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினரும் பாடுபட்டனர். சுமார் 80 மணி நேரம் நடைபெற்ற இந்த மீட்பு பணியில் கடந்த 29ஆம் தேதி துரதிஷ்டவசமாக சுர்ஜித்தின் உடலை மட்டுமே மீட்டு எடுக்க முடிந்தது. குழந்தை சுர்ஜித்தின் இறப்பிற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்தனர்.


குழந்தையை இழந்து தவிக்கும் சுர்ஜித்தின் குடும்பத்தினருக்கு தமிழக அரசின் சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் .10 லட்சத்தை வழங்குவதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். அதனடிப்படையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு சுர்ஜித் குடும்பத்தினரை சந்தித்து ரூபாய் 10 லட்சத்திற்கு ஆன காசோலையை வழங்கியுள்ளார். இதற்குப் பின்பு செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் சிவராசு, அழுகிய நிலையில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சிறுவன் சுர்ஜித்தின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட திசுக்கள் தற்போது டிஎன்ஏ ஆய்விற்காக அனுப்பப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் ஆழ்துளை கிணற்றில் இருந்து சுர்ஜித்தின் உடலை மீட்க வில்லை என்று பலரும் வதந்திகளை பரப்பி வருகின்றனர் அதனை நம்பாதீர்கள் எனவும் கூறியிருக்கிறார்.