ரஜினி தான் முக்கியம்! கண்டிப்பான உத்தரவு போட்ட எடப்பாடி பழனிசாமி!

எத்தனை நிகழ்ச்சிகள் இருந்தாலும் ரஜினியின் மகள் திருமணத்திற்கு செல்ல வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கண்டிப்பான முடிவு எடுத்தள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


நடிகர் ரஜினியின் மகள் சவுந்தர்யாவுக்கு மறுமணம் திங்களன்று நடைபெற உள்ளது. இதற்காக தனக்கு நெருக்கமான நண்பர்கள் மற்றும் மிக முக்கியமான அரசியல் கட்சித்தலைவர்களை மட்டும் சந்தித்து ரஜினி அழைப்பிதழ் கொடுத்து வருகிறார்.

 

மு.க.ஸ்டாலின், தனது நண்பர் திருநாவுக்கரசர், கமல் உள்ளிட்டோருக்கு அழைப்பிதழ் கொடுத்த ரஜினி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவை வீடுதேடிச் சென்று கடந்த வாரம் பத்திரிகை கொடுத்தார்.

 

அருகில் உள்ள ஓ.பி.எஸ் வீட்டுக்கும் ரஜினி சென்றதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் உண்மையில் ரஜினி ஓ.பிஎஸ் வீட்டுக்கு செல்லவில்லை. இந்த நிலையில் அமைச்சருக்கு மட்டும் பத்திரிகை கொடுத்த ரஜினி, ஸ்டாலினை நேரில் சென்று அழைத்த ரஜினி முதலமைச்சரை ஏன் சந்திக்கவில்லை என்று விமர்சனங்கள் எழுந்தன.

 

இதனை தொடர்ந்து திடீரென இன்று காலை ஏழு மணியளவில் ரஜினி எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு சென்றார். இதற்கு முதல் நாள் இரவு தான் ரஜினி தரப்பில இருந்து எடப்பாடியை சந்திக்க நேரம் கேட்கப்பட்டது. மறு நாள் பிரதமர் திருப்பூர் வருகை உள்ளிட்ட பல்வேறு பணிகளில் எடப்பாடி பிசி.

 

இருந்தாலும் காலையிலேயே ரஜினியை சந்திப்பதாக எடப்பாடி கூறிவிட்டார். இதனை தொடர்ந்தே காலை ஏழு மணி அளவில் சென்னை க்ரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி வீட்டுக்கு ரஜினி சென்றார். ரஜினியை வீட்டு வாசல் வரை வந்து எடப்பாடி வரவேற்று அழைத்துச் சென்றார்.

 

இதனை தொடர்ந்து பத்திகை கொடுத்துவிட்டு மரியாதை நிமித்தமாக சில வார்த்தைகள் பேசிவிட்டு ரஜினி புறப்பட்டுள்ளார்.இதற்கிடையே ரஜினி திடீரென பத்திரிகை கொடுத்த காரணத்தினால் திங்களன்று எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஒப்புக் கொண்டிருந்தார்.

 

தமிழக அரசின் மிக முக்கியமான பணிகள், அதிகாரிகளுடனான சந்திப்பி என திங்களன்று மிகவும் பிசியான நாள் என்பதால் ரஜினி மகள் கல்யாணத்திற்கு எடப்பாடி செல்வது கடினம் என்றார்கள். ஆனால் எடப்பாடியோ நிச்சயமாக கல்யாணத்திற்கு செல்ல வேண்டும், அதற்கு ஏற்ப ஏற்பாடுகளை செய்யும் படி கண்டிப்பாக உத்தரவு போட்டுவிட்டாராம்.

 

ரஜினியை வீட்டு வாசலுக்கு வந்து வரவேற்றது, நாளை ரஜினி மகள் கல்யாணத்தில் பங்கேற்பது என ரஜினிக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்தது ரஜினியின் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.