அமைச்சர்களை தனித்தனியாக அழைத்து கண்டித்து அனுப்பிய முதல்வர் எடப்பாடி..காரணம் இதுதான்!!

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவை சேர்ந்த அமைச்சர்களை தனித் தனியே அழைத்து பொதுவெளியில் எந்தவித கருத்துக்களையும் தெரிவிக்க வேண்டாம் என கண்டிப்பாக கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


கடந்த சில நாட்களாக அதிமுக கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் பலரும் மாறுபட்ட கருத்துக்களையும் மேடையில் பேசியவாறு வந்துள்ளனர். அதாவது 

சமீபத்தில் நடைபெற்ற துக்ளக் விழாவில் பங்கேற்ற ரஜினிகாந்த் தந்தை பெரியார் குறித்து பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியிருந்தார். அவரது கருத்துகளை அதிமுகவை சேர்ந்த அமைச்சர்கள் எதிர்த்து தங்களது கண்டனங்களை தெரிவித்தனர்.

ஆனால் அதே கட்சியை சேர்ந்த வேறு சில அமைச்சர்கள் ரஜினியின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால் ஆளும் கட்சியினர் இடையே ஒருமித்த கருத்து நிலவவில்லை என பலரும் பேச ஆரம்பித்தனர். இதன் தாக்கம் சமூக வலைத் தளத்திலும் பல மீம்ஸ்களை கொண்டு வந்தது. இதனால் கடுப்பான முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முக்கிய நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்கிறார்.

அதாவது அவரது தலைமையின் கீழ் உள்ள அமைச்சர்கள் அனைவரையும் அழைத்து தனித்தனியாக  பொதுவெளியில் எந்த ஒரு கருத்தையும் பகிர்ந்து கொள்ளக் கூடாது எனவும் கூறியிருக்கிறார் . அது கட்சி பற்றிய கருத்துக்களாக இருந்தாலும் அல்லது கூட்டணியை பற்றிய கருத்துகளாக இருந்தாலும் அதை பொதுவெளியில்  பேசக்கூடாது என்று அவர் அமைச்சர்களிடம் கண்டித்து கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது ‌