ஸ்டாலின் - சந்திரபாபு நாயுடு சந்திப்பு: செம்மையா கலாய்த்த தமிழிசை!

தமிழிசை பேட்டி


சென்னையில் தமிழிசை செய்தியாளர்களிடம் பேசியதாவது:-

பணமதிப்பிழப்பால்ருளாதார ரீதியாக நாடு  முன்னேற்றம் அடைந்துள்ளது. வரிகட்டுபவர்கள் 3 கோடியில் இருந்து 6கோடியாக உயர்ந்துள்ளது. நேற்று திருநாவுக்கரசர் நடத்திய ஆர்பாட்டத்தில் பணமதிப்பு நீக்கம் பற்றி பேசியதை விட, இளங்கோவனைப் பற்றி பேசியது தான் அதிகமாக இருந்தது.

ஸ்டாலின் சந்திரபாபு நாயுடு சந்திப்பால்  தமிழக அரசியலில் மட்டுமல்ல, இந்திய அரசியலிலும் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை. பணமதிப்பிழப்பு பாமரமக்கள் நலனுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை. கருப்புப்பணம் பட்டியல் விரைவில் வெளிவரும். கனிமொழி டுவீட் குழப்பமாக உள்ளது. ஸ்டாலின் சந்திரபாபு நாயுடு சந்திப்பு நேற்று நடந்தது அதைப்பற்றி இன்றைக்கு டுவீட் போடுகிறார் என்றால் குழப்பமாக உள்ளது. அவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதை காட்டுகிறது.

70 ஆயிரம் கோடி மக்கள் பணத்தை சந்திரபாபு நாயுடு தரவில்லை. பயத்தின்காரணமாக ஒன்றிணைவோம் என கூறிவருகிறார்கள். இலங்கையில் தமிழர் நலனுக்காக தொடர்ந்து பா ஜ க குரல் கொடுக்கும். மோடியைவிட ஸ்டாலின் அறிவாளி என சந்திரபாபு கூறியதற்கு சிரிப்பைத் தவிர வேறு பதில் இல்லை.