தெலுங்கானா சட்டப்பேரையில் ஓங்கி ஒலித்த திருக்குறள்! தமிழிசையால் தமிழுக்கு கிடைத்த பெரும் புகழ்! என்ன தெரியுமா?

தெலங்கானா மாநிலத்தின் ஆளுநரான தமிழிசை சௌந்தரராஜன் தன்னுடைய கன்னியுரையை இன்று நிகழ்த்தியுள்ளார்.


கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தெலங்கானா மாநிலத்தின் ஆளுநராக டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் பொறுப்பேற்றார். அவர் தன்னுடைய முதல் உரையை இன்று தெலங்கானா சட்டமன்றத்தில் உரைத்தார். அதற்கு முன்னர் தெலங்கானா மாநிலத்தின் முதலமைச்சராக சந்திரசேகரராவ் மற்றும் முக்கிய அமைச்சர்கள் தமிழிசை சௌந்தர்ராஜன் வரவேற்று சட்டசபைக்குள் அழைத்துச்சென்றனர்.

"அனைவருக்கும் வணக்கம்" என்றுரைத்தார். அதன்பின்னர் தெலுங்கில் "அந்தரிக்கு நமஸ்காரம்" என்று கூறிவிட்டு தன்னுடைய முதல் உரையை தொடங்கினார். கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் வரை ஆங்கிலத்தில் உரையாற்றினார். தெலுங்கானா சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழிசை சௌந்தர்ராஜன் உரையை ஆவலுடன் கேட்டனர்.

தன்னுடைய உரையை முடிக்கும் போது, "உறு பசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேராதியல்வது நாடு" இன்றைய வள்ளுவனின் வாய்மொழியை மேற்கோள்காட்டி கூறினார். அதாவது அதிகமான பசி, ஓயாத நோய் மனிதனின் அழிவை தீர்மானிக்கின்ற பகை முதலியன இல்லாமல் இருப்பதே உயர்ந்த நாட்டிற்கு எடுத்துக்காட்டாக அமையும் என்று கூறியுள்ளார்.

இந்த உரையானது தெலங்கானா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.