சேலத்துக்கு மருமகள் ஆன சீன இளம்பெண்! ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட திருப்பம்!

ஆஸ்திரேலியாவில் மருத்துவராக பணிபுரியும் தமிழக இளைஞர் ஒருவர் சீன பெண்ணை திருமணம் செய்துள்ளது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.


தமிழகத்தில் அஸ்தம்பட்டி எனும் பகுதிக்கு அருகேயுள்ள மணக்காடுப்பட்டி என்னும் இடத்தில் அருண் பிரசாத் என்பவர் பிறந்து வளர்ந்தார். மருத்துவ படிப்பை முடித்த அருண்பிரசாத் ஆஸ்திரேலியா நாட்டிற்கு சென்று மருத்துவராக பணியாற்றி வந்தார். 

அப்போது ஆஸ்திரேலியாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் சீன பெண்ணான கிறிஸ்டியன் டி ஜாங் என்பவருடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. நெருக்கமானது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர்.

இருவரும் இருவரையும் முழுவதுமாக புரிந்து கொண்ட பிறகு, இருவீட்டாரின் ஒப்புதலுடன் சொந்த ஊரான மணகாட்டுப்பட்டியில் நேற்று திருமணம் செய்துள்ளனர். இந்த சம்பவமானது அந்த கிராமத்து மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் உண்மையான காதலுக்கு மத பேதமும், மொழி பேதமும் கிடையாது என்பதை உணர்த்தும் வகையில் இவர்களுடைய திருமணம் அமைந்துள்ளது.