தமிழக முதல்வர் ஆவேசம்! ரவுடித்தனம் செய்பவர்களை தண்டிக்க சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்..!

இன்று காவல் துறையினால் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் குறித்து தமிழக முதல்வர் கருத்து தெரிவித்தார். அப்போது, ரவுடித்தனம் செய்பவர்களை தண்டிக்க சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.


ஒருசில சம்பவங்கள் நடைபெறுவதை வைத்து சட்டம் ஒழுங்கு பற்றியும், தமிழக போலீஸார் குறித்தும் குறை கூறுவதை ஏற்கவே முடியாது. தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எப்படி இருந்தது என்பதை மக்கள் அறிவார்கள். ஏனென்றால் தி.மு.க. ஆட்சியில் மாவட்டச் செயலாளரே ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்டார் என்று தெரிவித்தார்.

மேலும், ஆலோசனைக் கூட்டத்தில் தி.மு.க. எம்.பி. செந்தில் அனுமதிக்கப்படாதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. முதல்வர் கூட்டத்துக்கு வருபவர்கள் அனைவரும் கொரோனா டெஸ்ட் எடுத்திருக்க வேண்டும். ஆனால், செந்தில் அந்த டெஸ்ட் செய்து ஆதாரத்தை சமர்ப்பிக்கவில்லை. அதனாலே அவரை கலந்துகொள்ள அனுமதிக்கவில்லை என்று தெரிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.