விவாகரத்து செய்தாலும் கவலை இல்லை..! தினமும் மேக்கப் போட்டு நம்ம வேலைய பார்க்கணும்! டிடியின் அட்வைஸ்!

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளினியாக பணியாற்றி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்த டிடி என்கிற திவ்யதர்ஷினி முதல் முறையாக தன் கணவரை விட்டு பிரிந்ததற்கான காரணத்தை மிகவும் உருக்கமாக கூறியிருக்கிறார்.


பிரபல தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி ஆவார். இவர் தொகுப்பாளினியாக மட்டுமல்லாமல் பவர்பாண்டி விசில் போன்ற திரைப்படத்தில் ஒரு சில முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமான நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் எப்போதுமே தன்னுடைய நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விதமே சற்று தனித்துவமாக காட்சியளிப்பதால் இவருக்கென்று மிகப்பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

கடந்த 2017 ஆம் ஆண்டு டிடி தான் காதலித்து வந்த ஸ்ரீகாந்த் ரவிச்சந்தர் என்பவரை வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். வெகு விமரிசையாக நடந்த இவர்களது திருமணம் சில நாட்களிலேயே பிரிவை சந்தித்தது . இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

தற்போது டிடி எப்பொழுதும் போல தன்னுடைய தொகுப்பாளர் பணியை வெகு விமர்சியாக செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கலாட்டா விருதுகள் சார்பில் டிடிக்கு சிறந்த தொகுப்பாளினி விருது வழங்கப்பட்டது. அப்போது விருதை பெற்றுக் கொள்ள போது மேடையில் வைத்து உருக்கமாக தன்னுடையவாழ்வைப் பற்றிய பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். மேலும் பெண்களுக்கு ஊக்கமளிக்கும் வகையிலும் பல விஷயங்களை அவர் கூறினார்.


அப்போது பேசிய அவர் எனக்கு தற்போது 34 வயதாகிறது . என் குடும்பத்திற்கு நான் செய்ய வேண்டிய கடமைகள் அனைத்தையும் நல்ல முறையில் செய்து விட்டேன். ஆகையால் நான் மிகவும் சந்தோஷமாக என் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன். இதுதான் என்னுடைய உற்சாகத்திற்கு அழகுக்கும் மிகப்பெரிய காரணம் எனவும் அவர் கூறினார். மேலும் பேசிய அவர் பெண்களுக்கு ஊக்கம் தரும் வகையில் தன் வாழ்வில் நடந்த கசப்பான சம்பவங்களை உதாரணமாகக் கூறி பேசத் துவங்கினார். என் வாழ்வில் நான் கடந்து வந்த கசப்பான சம்பவங்களைப் பற்றி நீங்கள் அனைவரும் அறிந்தது தான். 

வாழ்க்கையில் எது வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நடக்கக்கூடும். அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் நமக்கு இருக்க வேண்டும். யார் நம்மை விட்டு சென்றாலும் நாம் தைரியமாகவும் தன்னம்பிக்கையோடும் நம் வாழ்க்கையை வாழ வேண்டும். நம்முடைய கேரக்டரை யார் வேண்டுமென்றாலும் விமர்சனம் செய்யலாம்.

ஆனால் அதையெல்லாம் மனதில் கொள்ளாமல் நிம்மதியாக தூங்கி விட்டு காலையில் எழுந்து மேக்கப் போட்டு கொண்டு நம்முடைய அன்றாட பணிகளை மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் நம்மால் நம் வாழ்வில் நினைத்த லட்சியத்தை அடைய இயலும் என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் டிடி-யின் முன்னாள் கணவர் ஸ்ரீகாந்த் ரவிச்சந்தர் பேட்டி ஒன்றில் பேசும்பொழுது டிடியின் கேரக்டரைப் பற்றி மிகக் கடுமையாக விமர்சனம் செய்தார். தற்போது டிடி பேசியிருக்கும் இந்த கருத்துக்கள் தன்னுடைய முன்னாள் கணவருக்கான சிறந்த பதிலாக காணப்படுகிறது.