நீ இப்டி செய்வன்னு முந்தியே தெரியும! சிறையில் தினகரனை தெறிக்கவிட்ட சசிகலா!

சசிகலாவை சிறையில் சந்திப்பதற்காக தினகரன், விவேக் வெங்கடேசன், நாமக்கல் அன்பழகன் ஆகியோர் சென்றார்கள். சசிகலாவை கட்சிப் பதவியில் இருந்து தூக்கிவிட்டதால், கடும் கோபத்தில் இருப்பார் என்ற எண்ணத்தில்தான் சென்றார் தினகரன்.


இந்த விவகாரம் முன்கூட்டியே தெரிந்ததால் டென்ஷன் குறைந்து காணப்பட்டார் சசிகலா. உடல் நலம் ஓரளவு சீராக இருந்தது. ’எல்லாம் நல்லபடியா முடிஞ்சதா” என்று கேட்டிருக்கிறார்.

‘ஆமா…’ என்று தினகரன் ஆரம்பித்தபிறகுதான், அந்தக் கேள்வி விவேக்கை நோக்கி கேட்கப்பட்டது என்பதை உணர்ந்திருக்கிறார். மேற்கொண்டு தினகரனையே பேசச் சொல்லியிருக்கிறார் சசிகலா.

தினகரன் ஆசிர்வாதம் கேட்க, அமைதியாக புன்னகை பூத்திருக்கிறார். தேர்தலில் 15% முதல் 25% வாக்குகள் கிடைக்கும் என்றும் திருச்சி, ராமநாதபுரம், தென்காசி, தேனி ஆகிய தொகுதிகளில் நிச்சயம் வெற்றிபெறுவோம், இடைத்தேர்தலில் 6 தொகுதிகள் நிச்சயம் என்று சொன்னதை எந்த சுவாரஸ்யமும் இல்லாமல் கேட்டுக்கொண்டார்.

அதன்பிறகு விவேக்கை மட்டும் தனியே அழைத்துப் பேசியிருக்கிறார். ஏனென்றால் திங்களன்று விவேக் குழந்தைக்கு பெயர் சூட்டு விழா நடைபெற்றது. ஜெயலலிதா என்ற பெயர் குழந்தையின் ராசிக்கு சரிப்படவில்லை என்றதால் அந்த பெயர் சூட்டவில்லை என்று சொன்னதை ஏற்றுக்கொண்டார். 

திடீரென தினகரன் இப்படி செய்வார் என்று எதிர்பார்க்கவில்லை என்று விவேக் சொன்னதற்கு, ‘நான் இதை இன்னமும் முன்கூட்டியே எதிர்பார்த்தேன். இப்போதைக்கு நாம் செய்யக்கூடியது எதுவும் இல்லை, இனி, என்னால் அ.தி.மு.க. கேஸை நடத்த முடியுமா என்று தெரியவில்லை, வேறு வழக்கறிஞர் பார்க்க வேண்டும்” என்று சொல்லியிருக்கிறார்.

எப்படியும் சசிகலா சம்மதித்துத்தான் தீரவேண்டும் என்பது தினகரனுக்குத் தெரியும். ஆனால், இத்தனை சாந்தமாக பேசுவார் என்பதை தினகரனே எதிர்பார்க்கவில்லை. அதனால் தினகரன் மிகவும் சந்தோஷமாகிவிட்டார் என்பது மட்டும் உண்மை.