பெண் எம்பி பதவி ஏற்பு கொண்டாட்டம்! களைகட்டிய ஆபாச நடனம்! வைரல் வீடியோ!

மேற்கு வங்க மாநிலம் ஜாதவ்பூர் தொகுதியில் இருந்து திரினாமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மிமி சக்ரபர்த்தி


அண்மையில் எம்.பி.யாக பதவியேற்றுக் கொண்ட நிலையில், ஆபாச நடனங்களுடன் களைகட்டிய கொண்டாட்டம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.  சினிமாக்காரக் கும்பலுக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்த கும்பலில் கலாச்சாரமும் அதைச் சார்ந்தே இருக்கிறது.

மிமி சக்ரபர்த்தியின் ஜாதவ் பூர் தொகுதிக்குட்பட்ட நிம்குரியா என்ற கிராமத்தில் தான் இத்தகைய கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது. அதனை சிலர் வீடியோ எடுத்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். 

அந்த வீடியோவில் ஒரு ஆணும் பெண்ணும் மிகவும் ஆபாசமாக நடனமாடுவதும் அதனை பலர் கைதட்டி ரசிப்பதுமான காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இது தொடர்பாக இதுவரை புகார்கள் எதுவும் அளிக்கப்படாத நிலையில் போலீசார் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. 

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பா.ஜ.க.வினர் திரினாமுல் காங்கிரஸ் கட்சியின் அடிப்படைக் கலாச்சாரமே இதுதான் என்று தெரிவித்துள்ளனர். தேர்தலுக்கு முன் மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளைக் கொடுத்த மிமி சக்ரபர்த்தி இந்தப்பிர்சசினைக்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.