டாஸ்மாக்கில் குவாட்டர் பாட்டிலோடு அதையும் சேத்து கொடுங்கய்யா..! நெற்றியில் குங்குமம்..! கழுத்தில் தாலியுடன் கதறிய குடும்ப பெண்!

தமிழகத்தில் நாளை மதுக்கடைகள் திறக்கப்படுவதற்கு எதிராக பெண்ணொருவர் உருக்கமாக  வெளியிட்டுள்ள வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


52 நாட்களுக்கு பிறகு நாளை முதல் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவுள்ளன. கொரோனா பாதிப்பால் பெரும்பாலானோர் வாழ்வாதாரத்தை இழந்துள்ள நிலையில் தமிழக அரசு வருவாயை இழுந்துள்ளதால் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

குடிமகன்களே இந்த ஊரடங்கு காலத்தில் குடியை மறந்திருக்கும் நிலையில் தற்போது அரசு மீண்டும் டாஸ்மாக் கடைகளை திறந்திருப்பது பொதுமக்கள் அனைவருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சமூகத்தில் பல்வேறு வகைகளில் ஏற்படக்கூடிய சிரமங்களை அரசு கண்டுகொள்ளவில்லை என்று பல்வேறு சமூக வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

இல்லத்தரசி ஒருவர் சமூக வலைத்தளங்களில் தமிழக முதல்வருக்கு பரிதாபமாக ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார். அதாவது, "மிகவும் மகிழ்சிகரமான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. நாளை முதல் டாஸ்மாக் கடைகள் தமிழகத்தில் திறக்கப்படவுள்ளன. மக்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த அறிவிப்பு இதுவே. ஐயா முதல்வர் அவர்களே டாஸ்மாக் கடைகளில் ஒரு குவாட்டருக்கு ஒரு கோழி பிரியாணி இலவசமாக தாருங்கள்.

குவாட்டரை என்னுடைய கணவர் குடித்துவிட்டு கோழி பிரியாணியை பசியால் வாடும் என்னுடைய குழந்தைகளுக்கு தருகிறேன். உங்களுடைய பட்ஜெட்டுக்கு கோழி பிரியாணி அதிகமாக இருந்தால் பழைய கஞ்சியையாவது தாருங்கள். அதை வைத்தது பசியால் வாடும் என்னுடைய குழந்தைகளின் அவலத்தை போக்குகிறேன்" என்று வீடியோ வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டால் சமூகத்தில் குடிமகன்களின் ரகளைகள், பெண் வன்கொடுமை முதலியன மெதுவாக அதிகரிக்கும் என்று சமூக வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த இளம்பெண்ணின் கோரிக்கை வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.