76 வருடங்களாக உணவு சாப்பிடாமல், தண்ணீர் அருந்தாமல் உயிர் வாழ்ந்து வந்த சாமியார்..! 90 வயதில் அவருக்கு ஏற்பட்ட நிலை..! மெய்சிலிர்க்க வைக்கும் தகவல்!

76 வருடங்களாக உணவு சாப்பிடாமல் தண்ணீர் அருந்தாமல் வெறும் காற்றை மட்டுமே சுவாசித்து உயிர் வாழ்ந்து வந்த சாமியார் தன்னுடைய 90-வது வயதில் மூச்சுத்திணறல் காரணமாக இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை காலை) இறைவனடி சேர்ந்துள்ளார்.


குஜராத் மாநிலம், மேக்சனா மாவட்டத்தில் பிரக்லாத் ஜனி என்ற சாமியார் வசித்து வந்துள்ளார். 90 வயதாகும் இவர் உணவு உண்ணாமல் நீர் அருந்தாமல் வெறும் காற்றை மட்டுமே சுவாசித்து கடந்த 26 வருடங்களாக உயிர் வாழ்ந்து வந்திருக்கிறார். ஜானி இளம் வயதிலேயே அம்பாஜி கோயிலுக்கு அருகில் அமைந்திருந்த ஒரு சிறிய குகையை தனது வீடாக மாற்றிக் கொண்டார். பின்னர் அங்கேயே அருள் வார்த்தை கூறி யோகியாக புகழ் பெற்றார். இந்நிலையில் இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை காலை ) மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறைவனடி சேர்ந்து இருக்கிறார் . இவரை அந்த கிராமத்து மக்கள் மாதாஜின் என்றும், விஞ்ஞானிகள் பிரீத்தெரியன் என்றும் அழைக்கின்றனர். 

இவரைப் பல முறை விஞ்ஞானிகள் ஆராய்ச்சிக்கு உட்படுத்தி உள்ளனர். ஆனால் இதுவரை இவர் எப்படி உணவு உண்ணாமல் நீர் அருந்தாமல் உயிர் வாழ்ந்து வந்துள்ளார் என்பதை அவர்களால் கண்டறியும் முடியவில்லை. சொல்லப்போனால் ஜனி நீர் அருந்துவதால் சிறுநீர் கூட கழிக்க முடியாமல் வாழ்ந்து வந்துள்ளார். இப்படிப்பட்ட அதிசயமானவரை காண்பதற்கு பல தலைவர்கள் இதுவரை அவரை நோக்கி படை எடுத்து உள்ளனர். தன்னிடம் வரும் பக்தர்களிடம் ஒரு பைசா கூட வாங்காமல் அவர்களுக்கு நல்லாசி வழங்கி அனுப்பி வைப்பார் அந்த மாமனிதர்.

அம்பா தெய்வத்தின் மீது அதீத பக்தி கொண்டு விசுவாசியாக இருந்த அவர், எப்போதும் சிவப்பு ஆடை (சுன்ரி) அணிந்து, ஒரு பெண்ணைப் போல காட்சியளிப்பார். இதன் காரணமாக அவர் சுன்ரிவாலா மாதாஜி என்று அவரது பக்தர்களால் அன்போடு அழைக்கப்பட்டார். இந்த சாமிஜி தன்னுடைய 14ஆம் வயதில் இருந்து உணவு உண்ணாமல் நீர் அருந்தாமல் இருக்க ஆரம்பித்திருக்கிறார். தன்னுடைய உயிர் பிரியும் கடைசி நொடி வரை அவர் அதையே கடைப்பிடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஆசிரமத்தில் அவரது உயிர் பிரிந்தது என அவரது சீடர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும் அவரது உடல் பக்தர்களின் பார்வைக்காக இரண்டு நாட்கள் வைக்கப்படும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர். அதற்குப் பின்பு வியாழக்கிழமை அன்று ஆசிரமத்தில் உள்ள குகைக்கு அருகில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.