கடவுள் அனுப்பிய கொரோனா என்று கூறிய நிர்மலா சீதாராமனை வெளுத்துவாங்கும் சுவாமி, சிதம்பரம்

சமீபத்தில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “கொரோனா தொற்று நோய் என்பது கடவுளின் செயல். அதனால்தான் இந்தியப் பொருளாதாரம் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது” என்று கூறினார்.


இந்த விஷயத்தை கையில் எடுத்துக்கொண்ட சுப்பிரமணியன் சுவாமி, ’மோடி பிரதமரானபின் 2015ஆம் ஆண்டில் எட்டுவிழுக்காடாக இருந்த ஜிடிபி, 3.1 விழுக்காடாக இறங்கிவிட்டதற்கு யார் பொறுப்பு?” என்று கேட்ட்டு நிர்மலா சீதாராமனை தெறிக்க விட்டுள்ளார்.

அதேபோன்று முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தனது தொடர் ட்விட்டர் பதிவுகளில் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள ப.சிதம்பரம்,

மோடி தலைமையிலான ஒன்றிய அரசு பொருளாதாரம் தொடர்பான பிரச்சினைகளுக்கும் தனக்கும் தொடர்பு இல்லாதது போல் தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறது. இது துரோகம் மட்டுமல்ல, சட்ட மீறலும் கூட. மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி தொகையை கொடுக்க முடியாமல் ரிசர்வ் வங்கியிடம் இருந்து கடன் வாங்கிக் கொள்ளுமாறு மாநிலங்கள் அறிவுறுத்தப்படுகின்றன. முழு நிதிச் சுமையையும் மாநிலங்களின் மீது விழச் செய்யும் திட்டம் இது. ஒன்றிய அரசு தன் பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார் ப.சி.

மேலும் அவர், “தொற்றுநோய் கடவுளின் செயல் என்கிறார் அமைச்சர். அப்படியென்றால் இந்தியாவை கொரோனா தொற்று தாக்கும் முன் 2017-18, 2018-19 மற்றும் 2019-20 நிதியாண்டுகளில் நம் நாட்டின் பொருளாதாரம் தள்ளாடியதே... அதை எப்படி வரையறுப்பது? கடவுளின் தூதரான நிதியமைச்சர் தயவுசெய்து பதிலளிப்பாரா?” என்று கேட்டிருக்கிறார் ப.சிதம்பரம்.

என்ன பதில் சொல்லப் போறாங்க மேடம்..?