சன் டி.வி.யின் சீரியல் சாம்ராஜ்யம் சரிந்தது! ராதிகா, குஷ்புவை மிஞ்சிய பிரியாராமன்!

கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக மக்களை தன்னுடைய முட்டாள்தனமான சீரியல்களால் கட்டிப்போட்டிருந்த சன் டி.வி.யின் சர்வாதிகாரம் கடந்த வாரத்துடன் முடிவுக்கு வந்துவிட்டது.தமிழக மக்கள் சன் டி.வி.யில் போடும் சீரியல் தவிர வேறு எதையும் பார்க்க மாட்டார்கள் என்ற எண்ணம்தான் நிறைய பேருக்கு இருந்தது. அதனால் பார்க் எனப்படும் ரேட்டிங்கில் இதுவரை சன் தொலைக்காட்சியின் சீரியல்களே முதல் ஐந்து இடங்களைப் பிடித்துவந்தன.

முதன்முதலாக சன் டி.வி.யை தூக்கியெறிந்துவிட்டு அந்த இடத்தை ஜீ டி.வி. பிடித்திருக்கிறது. இதுவரை முதல் இடத்தில் இருந்த நாயகியை வெற்றிபெற்று செம்பருத்தி முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது. இந்த சீர்யல் முத்த மந்தரம் என்ற தெலுங்கு மொழித் தொடரை பின்பற்றி எடுக்கப்படும் தமிழ் தொடர் ஆகும்.

சீரியலில் யாருமே சன் டி.வி. தொடர்களை அடிக்கவே முடியாது என்ற நிலையை ஜீ டி.வி. மாற்றியுள்ளது. அது மட்டுமின்றி முதல் ஐந்து இடங்களுக்குள் ஜீ டி.வியின் யாரடி நீ மோகினியும் இடம் பெற்றுள்ளது. ஆக, இதுவரை சன் டி.வி. கட்டியாண்ட சர்வாதிகார கோட்டை முடிவுக்கு வந்துள்ளது.சன் நியூஸ் தொலைக்காட்சிதான் ஒரு காலத்தில் முதல் இடத்தில் இருந்தது. அதனை புதிய தலைமுறை சேனல் தகர்த்தது. அதன்பிறகு இப்போது பாலிமர் நியூஸ் முதல் இடத்தில் இருக்கிறது. செய்தி சேனல் போட்டியில் சன் தொலைக்காட்சி இடம் பெறவே முடியவில்லை.

அந்த நிலை விரைவில் சன் தொலைக்காட்சிக்கும் ஏற்பட்டுவிடும் என்பதுதான் உண்மை. அதுவும் இப்போது புதிய கேபிள் நடைமுறை வந்துவிட்டால், உண்மையான ரேட்டிங்கில் சன் டி.வி. காணாமல் போய்விடும். ராதிகா, குஷ்பு போன்ற நடிகைகள் நடித்தால் மக்கள் கண்டிப்பாக பார்ப்பார்கள் என்ற நிலையை மாற்றி, நல்ல கதை இருந்தால் பிரியாராமன் இருந்தாலும் பார்ப்பார்கள் என்று மாறிவிட்டது தமிழ் தொலைக்காட்சி.

இந்த ரேட்டிங் வந்தது முதல் சன் தொலைக்காட்சியின் பங்குகள் கிடுகிடுவென குறைந்துகொண்டு இருக்கிறது. சினிமாக்களை வைத்து இனியும் காலம் தள்ளமுடியாது என்பதை சன் தொலைக்காட்சி உணரவேண்டிய நேரம் இது.