வார்னர்,பரிஸ்டோவ் வேற லெவல்! RCB மோசமான தோல்வி!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன் ரைசேர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.


முதலில் பேட்டிங் செய்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் டேவிட் வார்னர் மற்றும் பரிஸ்டோவ் சிறப்பாக விளையாடி ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் பந்துவீச்சை பந்தாடினர்.

சிறப்பாக விளையாடிய இந்த இருவரும் சதம் அடித்து சாதனை படைத்தனர்.பரிஸ்டோவ் 56 பந்துகளுக்கு 114 ரன்களை குவித்து அவுட் ஆனார். டேவிட் வார்னர் 55 பந்துகளில் 100 ரன்களை எடுத்து கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தார். 

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்களை எடுத்தது. 

232 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பேட்ஸ்மேன்கள் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். 

ஒரு கட்டத்தில் 35 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து திணறிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கோலின் க்ராந்தோம் 37 ரன்களை எடுத்து அந்த அணியை மூன்று இலக்க ரன்களை ரன்களை எடுக்க உதவினார். 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அணைத்து விக்கெட்களையும் இழந்து 19.5 ஓவர்களில் 113 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

சன் ரைசேர்ஸ் ஹைதராபாத் அணியின் நபி நான்கு விக்கெட்களையும், சந்தீப் சர்மா 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.