7ம் தேதி அ.தி.மு.க.வில் முதல்வர் வேட்பாளர் குறித்து அறிவிப்பு இருக்கும் என்று சொல்லப்பட்டு வரும் நிலையில், திடீரென ஒரு ட்விட்டர் பதிவு வெளியிட்டு பரபரப்பை கிளப்பியிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்.
திடீரென பன்னீர்செல்வம் வெளியிட்ட ட்விட்டர் பதிவு பரபரப்பை ஏற்படுத்திருக்கிறது!
அவரது ட்விட்டர் பதவில், ‘தமிழக மக்கள் மற்றும் அஇஅதிமுக கழகத் தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டே எனது முடிவுகள் இதுவரை இருந்துள்ளன. இனியும் அவ்வாறே இருக்கும்.
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது! எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது!! எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்! என்று தெரிவித்துள்ளார். இந்த ட்வீட்டை பார்க்கும்போது, கட்சிக்கு நல்ல முடிவு எடுத்துவிட்டார் என்றால், சமாதானம் ஆகிவிட்டதாகவே கருதத் தோன்றுகிறது.
ஆனால், இதுகுறித்து இ.பி.எஸ். டீமில், ‘எந்த சமாதான விவகாரமும் நடைபெறவில்லை’ என்கிறார்கள். அப்படின்னா எதற்காக இந்த ட்வீட் என்பது பன்னீருக்குத்தான் வெளிச்சம்.