இந்தியாவில் இன்கம் டேக்ஸை ஒழிக்க வேண்டும்! பொருளாதார வளர்ச்சிக்கு சு.சுவாமி கூறும் அடடே யோசனை!

இந்தியாவில் வருமான வரியை ஒழிக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி நிர்மலா சீதாராமனுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.


இந்தியாவில் வருமான வரியை ஒழிக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி நிர்மலா சீதாராமனுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இதையடுத்து சண்டிகரில் பேட்டிய அளித்த மாநிலங்களவை எம்பி சுப்பிரமணியன் சுவாமி பொருளாதார வளர்ச்சிக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் எடுக்கும் நடவடிக்கைகளால் பலன் தரும் என தெரிவித்தார்.

வங்கிக் கடனுக்கான வட்டி விகிதத்தை 9 சதவீதமாகவும் குறைக்க வேண்டும், வருமான வரி ஒழிப்பு, நிரந்தர வைப்புத் தொகைக்கான வட்டியை 9 சதவீதமாக உயர்த்த வேண்டும் எனவும் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டால் இந்தியா பொருளாதாரத்தில் முன்னேறிச்செல்லும் என தெரிவித்தார்.

மேலும் பொருளாதார வளர்ச்சி முன்னேற்றம் குறித்து ஒரு புத்தகம் எழுதியுள்ளதாக குப்பிட்டுள்ள சுப்பிரமணியசாமி அந்தப் புத்தகத்தை செப்டம்பர் 5ம் தேதி வெளியிட உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் நாட்டில் பொருளாதார வளர்ச்சி மேம்பட கடந்த சில தினங்களுக்கு முன்னர் மத்திய நிதி அமைச்சர் சில சீர்திருத்தங்களை கொண்டுவந்துள்ளதாக தெரிவித்தார்.

அயல் நாடுகளுடன் ஒப்பிட்டால் தற்போதைய சீர்திருத்த அறிவிப்புகள் வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் வகையில் இருப்பதாக குறிப்பிட்டார். நாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் 10க்கும் மேற்பட்ட சீர்திருத்த அறிவிப்புகளையும் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளதாக சுப்பிரமணிய சாமி தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மேலும் மத்திய நிதி அமைச்சர் அறிவிப்பால் நாட்டின் பணப்புழக்கத்தை மேலும் அதிகரிக்கும் வகையில், பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.70,000 கோடி வழங்கப்படும். வீட்டுக்கடன், வாகனக் கடன், தொழில் கடன் ஆகியவற்றின் மீதான வட்டி விகிதங்கள் குறைவதால், கடன்பெற்றவர்களின் மாதத்தவணை குறைவதற்கு வாய்ப்பு ஏற்படும் என தெரிவித்த சுப்பிரமணிய சாமி வருமானவரி செலுத்தாதவர்களுக்கு அக்டோபர் முதல் ஈமெயில் மூலம் நோட்டீஸ் அனுப்பும் முடிவை வரவேற்பதாக தெரிவித்தார்.

மேலும் பொருளாதார வளர்ச்சியைப் பெருக்க நிர்மலா சீதராமன் துணிச்சலான நடவடிக்கை எடுத்து வருவதா பாராட்டியுள்ளார் சுப்பிரமணியசாமி மத்திய அமைச்சர் நிர்மலா சீதராமன் அறிவித்துள்ள வரி வசூல் சீர்திருத்த அறிவிப்புகள் சற்று என்னென்ன தெரியுமா?

மூலதன பங்குச்சந்தையில் முதலீட்டாளர் நலன் கருதி, உயர்த்தப்பட்ட உபரி வரி ரத்து, ஜி.எஸ்.டி மீதத்தொகை 60 நாட்களுக்குள் திருப்பி அளிக்க நடவடிக்கை, தொழில் முனைவோருக்கான வரி விதிப்பு நீக்கம்,

வருமான வரித்துறை நோட்டீசுக்கு 3 மாதங்களில் தீர்வு காண ஏற்பாடு, எளிய முறையில் வருமானவரித் தாக்கல் செய்ய எலக்ட்ரானிக் ஆன்லைன் முறை, அக்போடர் 1 முதல் முதல் வருமானவரி நோட்டீஸ் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும், தொழில் கடனை அடைத்தவருக்கு 15 நாட்களில் ஆவணங்களை திருப்பித் தர உத்தரவு, ரெப்போ வட்டி விகிதத்தை,

வங்கிகளின் வட்டி விகிதங்களோடு இணைப்பதால் இதன்மூலம், வீட்டுக்கடன், வாகன கடன், தொழில் கடன் வட்டி குறை நடவடிக்கை, சிறு, குறு,தொழில்முனைவோர், தொழில் தொடங்க எளிய வகையில் அனுமதி உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்