தாயின் கணவன் செய்த கேவலமான செயல்! வெகுண்டு எழுந்த மகள்! பிறகு நடந்த தரமான சம்பவம்!

ஐதராபாத்தில் 14 வயதுச் சிறுமியை பல்வேறு சந்தர்ப்பங்களில் பாலியல் பலாத்காரம் செய்த மாற்றாந் தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.


ஐதராபாத்தில் கோல்கொண்டா பகுதியைச் சேர்ந்த 14-வயதுச் சிறுமியின் தாய் வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. அந்தப் பெண்ணை திருமணம் செய்துகொண்ட பாலியல் மிருகத்துக்கு அந்தப் பெண்ணின் 14 வயது மகள் மீது ஒரு கண். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அந்த நபர் சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

ஒரு தருணத்தில் சற்றும் பொறுக்க முடியாத அந்த சிறுமி கோல்கொண்டா காவல் நிலையத்தை அணுகி தனது அவல நிலையை விளக்கினார். இதனைத் தொடர்ந்து அந்தச் சிறுமி ஒரு மருத்துவ மையத்துக்கு அனுப்பப்பட்டு அங்கு அந்த சிறுமிக்கு மருத்துவ உதவிகளும் கவுன்சிலிங்கும் அளிக்கப்பட்டு வருகின்றன. 

இது தொடர்பாக பாலியல் பலாத்காரம், போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தப்பியோடி தலைமறைவான இழிபிறவியை தேடி வருகின்றனர்.