ஒரு ரூபாயில் 50 பைசா திருடினாரா ஸ்டாலின்... அண்ணா விவகாரத்தில் சிக்கிய ஸ்டாலின்

வரும் 2021 சட்டமன்றத் தேர்தலில் எப்படியாவது ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்று கடுமையாக போராடிக்கொண்டு இருக்கிறார் ஸ்டாலின். அதற்கு அவர் பேசாமல் வாயைப் பொத்திக்கொண்டு இருக்க வேண்டுமே என்று அவரது கட்சிக்காரர்களே கடுப்பாகும் வகையில் எதையாவது பேசி வில்லங்கத்தை விலைக்கு வாங்கிவிடுகிறார்.


இப்போது உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்னும் பிரச்சாரத்தை திமுக தலைவர் ஸ்டாலின் முன்னெடுத்துள்ளார். இந்தப் பிரச்சாரத்தில் 100 நாட்களில் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதாக அவர் உறுதியளித்து வருகிறார். அப்போது அவர் பேசிய விவகாரம்தான் இப்போது வைரலாக பரவி வருகிறது.

அண்ணாதுரைக்கு ராயப்பேட்டை அமீர் கடை பக்கோடா என்றால் பிடிக்கும்; அதை வாங்கி வர ஒரு ரூபாய் கொடுப்பார். அதில் நான் எட்டணாவை திருடி கொள்வேன் என்று ஜாலியாகப் பேசியிருக்கிறார்.

அண்ணாவிடமே 50 பைசா திருடிய ஸ்டாலின், மக்களிடம் என்னவெல்லாம் திருடுவாரோ என்று நெட்டிசன்கள் போட்டு கலாய்த்துவருகிறார்கள். அவரை எப்படியாவது வாயை மூடிக்கொண்டு இருக்கச் சொல்லுங்க, இல்லைன்னா தி.மு.க.வை தோற்கடிக்க அவரே போதும் என்று தி.முக.வினர் டென்ஷனாகி வருகிறார்கள்.