காதல்! கல்யாணம்! அப்பா கமல் வழியில் மகள் ஸ்ருதி! என்னாச்சு தெரியுமா?

நடிகை ஸ்ருதிஹாசன் மற்றும் லண்டலின் வசித்து வரும் மைகேல் கார்சேல் இடையே ஏற்பட்ட காதலின் காரணமாக சுருதி ஹாசன் திரைப்படங்களில் நடிப்பதை குறைத்து இருந்தார்


இந்நிலையில்  சில நாட்களுக்கு முன்பு இவர்களின் காதலில் முறிவு ஏற்பட்டதால் ஸ்ருதிஹாசன் தற்போது முழுவீச்சில் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார் . இது அவரின் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது .  இந்நிலையில் ரசிகர் ஒருவர் டுவிட்டரில் ஸ்ருதி ஹாசனிடம் நீங்கள் எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்கள் . உங்கள் திருமணத்திற்கு எங்களுக்கு அழைப்புக் கொடுங்கள் .

ரசிகர்கள் அனைவரும் உங்களது திருமண விழாவில் கண்டிப்பாக பங்கு பெறுவோம் என ஒரு ரசிகர் ட்வீட் செய்திருந்தார் . இந்தக் கேள்விக்கு உடனே பதில் அளித்த சுருதிஹாசன் கல்யாணம் செய்து கொள்ள நீண்ட காலமாகும். நாம் அது வரை ஏன் காத்திருக்க வேண்டும். நாம் ஒன்றாக பிறந்த நாளை கொண்டாடலாம் என ரசிகர்களுக்கு பதிலளித்திருந்தார் .

இந்த செயலின் மூலம் ரசிகர்களின் மனதை சற்றும் புண்படுத்தாமல் அவர்கள் மகிழ்ச்சி பெறும் வகையில் பதில் அளித்துள்ளது ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது . இந்த செயலின் மூலம் ஸ்ருதிஹாசனும்  கமல்ஹாசனை போலவே ரசிகர்களின்  மனதை புரிந்து நடந்து கொண்டிருக்கிறார் என சுருதிஹாசனை பாராட்டி வருகின்றனர்.