நாக்கை வைத்து ஸ்ரீதேவி மகள் செய்த செயல்! முகம் சுழிக்கும் ரசிகர்கள்!

மறைந்த பழம்பெரும் நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் தனது நாக்கை 360 டிகிரி கோணத்தில் சுழற்றிக் காண்பித்து அசத்தியுள்ளார்.


மறைந்த பழம்பெரும் நடிகை ஸ்ரீதேவி தயாரிப்பாளர் போனி கபூர் தம்பதியின் மூத்த மகள் ஜான்வி கபூர். அமெரிக்காவின் நியூயார்க்கில் நடிப்புக் கலை பயின்ற ஜான்வி கபூர் இந்தியா திரும்பியதும் திரையரங்கில் வாய்ப்புக்காக காத்திருந்தார். 

 

அப்போது தடக் திரைப்பட வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. இந்தப் படமானது மராத்தியில் வெளியாகி கோடிகளை குவித்த சாய்ரத் படத்தின் ரீமேக் ஆக உருவானது. ஆணவக் கொலையை மையக் கருவாகக் கொண்ட இப்படம் கடந்த ஆண்டு வெளியாகி 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் குவித்தது. 

 

அறிமுக நடிகர் நடிகை நடித்து ஹிந்தியில் மிகப்பெரிய ஹிட்டடித்ததுடன் அதிக வசூலை ஈட்டிய படமாகவும் தடக் அமைந்தது. இந்த படத்தை கரண் ஜோகர் தயாரித்திருந்தார். அடுத்ததாக ரன்வீர் சிங் கரீனா கபூர் ஆகியோர் நடிக்கும் தக்ட் படத்திலும் ஜான்வி கபூர் நடிக்கிறார்.

 

  இந்தப் படத்தையும் கரண் ஜோகர் தயாரிக்க உள்ளார்.  இந்த நிலையில் அண்மையில் பேட்டியளித்த நடிகை ஜான்வி கபூர், செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது தங்களின் தனித்திறன் என்ன என்று செய்தியாளர் வினா எழுப்பினார்.

 

   இதற்கு பதிலளித்த ஜான்வி கபூர், தனது நாக்கை தன்னால் 360 டிகிரி கோணத்தில் சுழற்ற முடியும் என்று விடை கொடுத்தார். 

 

இவ்வாறு கூறியதோடு மட்டுமல்லாமல் நாக்கை 360 டிகிரி கோணத்திலும் காண்பித்து அவர் அசத்தினார். இந்தக் காட்சிகள் சமூகவலைதளங்களில் வேகமாக பரப்பப்பட்டு வருகின்றன. 

 

   சிலர் ஜான்வியின் இந்த செயல் அறுவெறுப்பாகவும் முகம் சுழிக்கும் வகையிலும் உள்ளதாக கூறி வருகின்றனர். அந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்.