ராமதாஸ் வழங்கும் ஸ்பெஷல் விருதுகள். யாருக்குத் தெரியுமா?

விருதுகள்!


பாட்டாளி மக்கள் கட்சியின் வளர்ச்சிக்காக சிறப்பாக களப்பணியாற்றுபவர்களை அங்கீகரிக்கும் வகையிலும், அவர்களைப் போன்று தீவிரமாக களப்பணியாற்ற மற்றவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் பாட்டாளி மக்கள் கட்சி சிறந்த செயல்வீரர்கள் விருது வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது என்று ராமதாஸ் தெரிவித்துள்ள்ளார்.

 2020-ஆம் ஆண்டில் தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் மொத்தம் 5 பேருக்கு இந்த விருதுகள் வழங்கப்படவுள்ளன. விருதுகளைப் பெறுவதற்கான 5 செயல்வீரர்கள் ராமதாஸால் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.

1. முனைவர் ச.சிவப்பிரகாசம், தலைவர், சமூக முன்னேற்ற சங்கம்

2. திரு. மீ.கா. செல்வக்குமார், அமைப்பு செயலாளர், பாட்டாளி மக்கள் கட்சி

3. திரு. திருத்துறைப்பூண்டி டி.எஸ்.ஆர்.எம். சுப்பிரமணிய அய்யர், மாநில துணைத்தலைவர், பாட்டாளி மக்கள் கட்சி 

4. திருமதி. நிர்மலா ராசா, மாநில செயலாளர், பா.ம.க. மகளிர் அணி

5. திரு. பி.வி. செந்தில், மாநில செயலாளர், பா.ம.க. இளைஞரணி

பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகளின் களப்பணி, தலைமையால் வழங்கப்படும் பணிகளை சிறப்பாக செய்தல், கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபடுதல் உள்ளிட்ட பணிகளை அளவீடு செய்து அவற்றின் அடிப்படையில் இந்த விருதுகள் வழங்கப்படுகிறதாம்.