இந்திய அணியை தெறிக்கவிட்டு வென்ற தென் ஆப்பிரிக்கா அணி!

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி t20 போட்டியில் தென்ஆப்பிரிக்கா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.


முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய தவான் மட்டும் சிறப்பாக விளையாடி 25 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார் . பின்னர் களமிறங்கிய அனைத்து வீரர்களும் தென்ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர் . 

இதனால் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர் . இதனால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 134 ரன்களை மட்டும் எடுத்தது.

தென்ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரபடா சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்களை வீழ்த்தினார். ஹென்ரிக்ஸ் சிறப்பாக பந்துவீசி 2 விக்கெட் வீழ்த்தினார்.பின்னர் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி தொடக்கம் முதலே இந்திய அணியின் பந்துவீச்சை விளாசியது. தென்ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பீகாக் அதிரடியாக விளையாடி 79 ரன்களை குவித்தார். இதனால் தென்ஆப்பிரிக்கா அணி விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளதால் இந்த தொடர் டிராவில் முடிவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.