பெற்ற தந்தையை ஓங்கி ஒரே தள்ளு! நொடியில் பறிபோன உயிர்! சிறையில் மகன்! பகீர் சம்பவம்!

சேலத்தில் உள்ள கன்னங்குறிச்சியில் அமைந்துள்ள நிலத்தை விற்க முயற்சி செய்த தந்தையை , மகன் கொலை செய்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


சேலத்தில் உள்ள அன்னதானபட்டியை சேர்ந்தவர் முனுசாமி . இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர் . இவர் தன்னுடைய இரண்டாவது மனைவியுடன் அன்னதானப் பட்டியில் வசித்துவருகிறார். முனுசாமிக்கு சொந்தமாக கன்னங்குறிச்சி என்னும் இடத்தில் 60 சென்ட் நிலம் இருக்கிறது. முனுசாமிக்கு சொந்தமான அந்த இடத்தை விற்பதற்காக முயற்சி எடுத்துள்ளார். 

இவருடைய இளைய மகன் பெயர் தாமோதரன். தன் தந்தை நிலத்தை விற்பதற்கு முயற்சி செய்வதை அறிந்த தாமோதரன் தன் தந்தையிடம் எதற்காக நிலத்தை விற்கிறீர்கள் என்று கேட்பதற்காக சென்றுள்ளார் .

அந்த நேரத்தில் முனுசாமி தன்னுடைய நிலத்தை இன்னொருவருக்கு விற்பதற்காக காண்பித்து கொண்டிருந்தார். அப்போது தந்தைக்கும் மகனுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை சண்டையாக மாறியது . பின்விளைவாக தாமோதரன் தன் தந்தை முனுசாமியை கீழே தள்ளிவிட்டு இருக்கிறார். இதனால் அதிர்ச்சியில் கீழே விழுந்த முனுசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

தகவலறிந்து வந்த கன்னங்குறிச்சி போலீசார் முனுசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் மேலும் முனுசாமியை கொன்ற தாமோதரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.