சூரிய கிரகண அதிசயம்! உரல், வெண்கல கின்னத்தில நேராக நின்ற உலக்கை! தேனி சுவாரஸ்யம்!

உலகம் முழுவதும் சூரிய கிரகணம் நிகழவு இன்று நடைபெறுகிறது. மேலும் இன்று 2020ஆம் ஆண்டின் கடைசி கிரகணம் ஆகும்.


சந்திரன் பூமியையும் பூமி சூரியனையும்சுற்றுகின்றதுஅப்படி சுற்றும்போது சூரியன் பூமி இடையே ஒரே நேர்கோட்டில் சந்திரன் வரும்போது சூரிய கிரகணம் என்ற நிகழ்வு நடைபெறுகிறது சூரியன் சந்திரன் பூமி என மூன்றும் ஒரே நேர்கோட்டில் குவியக் கூடிய நிகழ்வாக நடக்கிறது. இதனால் நாம் அந்த நேரங்களிலஎதை செய்தாலும் அதற்கான பலன்கள் மிக அதிகமாக கிடைக்கும் இதன் காரணமாகவே தன் வீட்டில் இருந்தபடியே இறைவனை வழிபடுவதும் மந்திரங்களை ஜெபிப்பது நல்லது என்று முன்னோர்கள் கூறிவருகின்றனர்.

2020 ஆம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் இன்று நடைபெற்றது இன்று காலை 8 மணி முதல்11 வரை சூரியகிரகணம் நடைபெறுவதாக இருந்துள்ளது இந்த சூரிய கிரகணத்தை விஞ்ஞானபூர்வமாக அறிஞர்கள் எழுதி வைத்தாலும் இன்றளவும் கிராமங்களில் ஒரு சில நிகழ்ச்சிகளை செய்து வருகின்றனர்.

இந்த நிகழ்வுகளில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள மரிக்குண்டு கிராமத்தில் இன்று காலை 8 மணி முதல்கம்பு சோளம் ஆகியவற்றில் இடிக்கும் உலக்கை கொண்டு இன்று சந்திர கிரகணம் உதயம் மற்றும் கடைசி நிகழ்வினை எவ்வாறு காண்பது என்பது உலக்கை கொண்டு கணிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த உலக்கை ஆனது சூரிய கிரகணம் இருக்கும்பொழுது உலக்கையைஉரலில் வைத்து நேராக வைக்கும்பொழுது மற்ற சமயங்களில் நேராகநிற்காது இந்த சமயத்தில் மட்டும் நேராக நிற்கும் .மேலும் வெண்கலம் பாத்திரகின்னம் மூலம் இந்த நிகழ்வுகளை செய்திருந்தனர் இந்த வெண்கல பாத்திர கிண்ணத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அதைநேராக வைக்கும் பொழுது சூரிய கிரகணம் இருக்கும்பொழுது நேராக தானாக நிற்கும் பின்பு சூரிய கிரணம் மறையும்போது தானாக கீழே விழுந்துவிடும் மேலும் முருகன் எண்பவரிடம்நேரில் கேட்டபோது அந்த காலங்களில் சூரிய கிரகணம் பற்றி முன்னோர்கள் வகுத்து வைத்த முறையை இன்றளவும் கடைப்பிடித்து வருகின்றோம்.

தற்சமயம் பல விஞ்ஞான பூர்வமாக செயல்கள் கடைப்பிடித்தாலும் கிராமங்களில் உலக்கை வைத்தும் வெண்கல கிண்ணத்தினை வைத்தும் சூரிய கிரகணம் உதயம் மற்றும் மறையும் நேரத்தினை கணிக்கபடுகிறது. சூரிய கிரகணம் ஏற்படும் நேரத்தில் சூரிய கிரகணம் முடியும் முடியும் நேரத்தையும் கண்டுபிடித்து வருகின்றனர் முன்னொரு காலத்தில் சூரிய கிரகணம் சூரிய கிரகணம் எந்த நேரத்தில் உதயமாகும் எந்த நேரத்திலும் மறையும் என்பதை கண்டுபிடிக்க இந்த உலகை வைத்து முன்னோர்கள் கடைப்பிடித்து வந்துள்ளனர்.

மேலும் இந்த சமயங்களில் உணவு அருந்துதல் மற்றும் ஒருசில செயல்களை செய்யாமல் இருப்பது நல்லதுஎன்று தெரிவித்தார்.