சட்னி அரைக்க மிக்சியை ஓபன் செய்த பெண்..! ஜாருக்குள் ஓய்வில் இருந்த பாம்பு குட்டி! தேனி பரபரப்பு!

மிக்ஸி ஜாரிலிருந்து பாம்பு குட்டி வெளியே வந்த சம்பவமானது தேனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


தேனி மாவட்டத்தில் பாரஸ்ட்ரோடு என்னுமிடம் அமைந்துள்ளது. இப்பகுதியின் 5-வது தெருவில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவியின் பெயர் செல்வி. நேற்று செல்வி வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த போது பாம்பு சத்தம் கேட்டுள்ளது.

அதிர்ச்சியடைந்த செல்வி அக்கம்பக்கத்தினரை அழைத்துள்ளார். அவர்களும் வீட்டில் தேடி பார்த்தனர். ஆனால் பாம்பு கிடைக்கவில்லை. உடனடியாக முருகன் அருகேயுள்ள பழனிசெட்டிப்பட்டி என்னுமிடத்தில் பணியாற்றி வரும் பாம்பாட்டியான கண்ணன் என்பவரை வீட்டிற்கு அழைத்துள்ளார்.

கண்ணன் வீட்டிற்கு வந்து பார்த்த போது, பாத்திரங்களிலிருந்து சத்தம் வருவதையறிந்த கண்ணன் பாதியாக திறந்திருந்த மிக்ஸி ஜாரை பார்த்துள்ளார். அதை முழுவதுமாக திறந்த போது, 2 அடி பாம்புக்குட்டி இருப்பதை கண்ட அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பாம்பை பிடித்து கொண்டு வீரப்ப அய்யனார் கோவில் மலையில் விட்டுவிட்டார். வீட்டு அலங்காரத்திற்காக வைக்கப்பட்ட கொடியின் வழியாக பாம்பு வந்திருக்ககூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சம்பவமானது தேனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.