திடீரென மோதிய ஆட்டோ! கீழே விழுந்த பைக் நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி! காரணம் உள்ளே இருந்த பாம்பு!

நடுரோட்டில் விபத்தில் சிக்கிய இளைஞரின் இருசக்கர வாகனத்திலிருந்து பாம்பு வெளியான நிகழ்வு தேனி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தேனி மாவட்டத்தில் பெரியகுளம் சாலையில் இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராவிதமாக அந்த இருசக்கர வாகனத்தின் மீது ஆட்டோ ஒன்று வேகமாக மோதியுள்ளது. 

இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்த இளைஞர் கீழே விழுந்துள்ளார். ஆட்டோ ஓட்டுநருக்கும் இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபருக்கும் இடையே கடுமையான வாக்குவாதங்கள் ஏற்பட்டன. அப்போது அந்த இருசக்கர வாகனத்திலிருந்து 4 அடி நீள மலைப்பாம்பு வெளியே வந்துள்ளது. 

இதனை பார்த்த பொதுமக்கள் அலறியடித்து சிதறினர். சில நிமிடங்களுக்கு பிறகு அந்த பாம்பு மீண்டும் இரு சக்கரவாகனத்தில் சென்றுவிட்டது. பின்னர் பொதுமக்கள் சிலர் திறமையாக அந்த 4 அடி நீள மலைப்பாம்பை வெளியே எடுத்தனர். அப்போது அந்த பாம்பு அவர்களை நோக்கி சீறியதால், கட்டையால் அடித்து அதை கொன்றுவிட்டனர். அதன் பின்னர் சம்பவயிடத்திலகருந்து பாம்பு அப்புறப்படுத்தப்பட்டது.

விபத்திலும் சிக்கி கொள்ளாமல், பாம்பிடமும் சிக்கிக்கொள்ளாமல் அந்த இளைஞர் தப்பித்த சம்பவமானது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.