இதயத்தின் நண்பனாக சின்ன வெங்காயத்தையும் சொல்லலாம்.. காரணங்கள் இதோ..

சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் இரண்டுமே மருத்துவத்தன்மை கொண்டது என்றாலும் சின்ன வெங்காயத்தையே மருத்துவத் தோழன் என்று அழைக்கிறார்கள்.


  • வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து, அந்தத் தண்ணீரைக் குடித்தால் நீர்க்கடுப்பு உடனே நின்றுவிடும்.
  • வெயில் காலத்தில் வரும் கட்டிகள் மீது வெங்காயத்தை நசுக்கி சாறுபிழிந்து தடவினால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.
  • வெங்காயத்துக்கு பாலுணர்வைத் தூண்டும் சக்தி உண்டு என்பதால் ஆண்கள் நிறையவே சாப்பிட்டு பலன் அடையலாம்.
  • ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை வெங்காயம் கரைக்கக்கூடியது என்பதால், இதனை இதயத்தின் நண்பனாக கருதலாம்.