நீ என்னுடன் அதை செய்ய வேண்டும்! இல்லை என்றால்? 21 வயது பெண்ணுக்கு 11 வயது சிறுவன் அனுப்பிய பகீர் மெசேஜ்! என்னாச்சு தெரியுமா?

நீ என்னுடன் அதை செய்ய வேண்டும் இல்லை என்றால் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பதிவிட்டு விடுவேன் என்று 21 வயது பெண்ணை 11 வயது சிறுவன் மிரட்டி இருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சமீபகாலமாகவே பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. அதிலும் குறிப்பாக 18 வயதுக்குக் கீழ் இருக்கும் சிறுவர்கள் கூட இளம்பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கு கின்றனர். அந்த வகையில்தான் சமீபத்திலும் வாய்ஸ் லாக்கர் ரூம் என்ற சமூக வலைதள பக்கத்தின் மூலமாக சிறுவர்கள் சிலர் பெண்களை பற்றி ஆபாசமாக பேசி வந்த சம்பவம் அம்பலமானது. தற்போது மேலும் ஒரு 11 வயது சிறுவன் 21 வயது பெண்ணிற்கு பாலியல் அச்சுறுத்தலை பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

காசியாபாத்தை சேர்ந்த சிறுவன் ஒருவன் ஆறாம் வகுப்பு படித்து வருகிறான். இவன் 21 வயது மிக்க பெண் ஒருவருக்கு செக்ஸ் டார்ச்சர் அளித்துள்ளதாக பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்தப் பெண் தன்னுடைய பிஎஸ்சி படிப்பை முடித்துவிட்டு சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் கடந்த மே 7-ஆம் தேதியன்று அந்த பெண்ணின் செல்போனுக்கு மர்ம நபர் ஒருவரிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. அப்போது அவரது சமூக வலைதளப் பக்கங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும், மார்பிங் செய்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விடுவேன் என்றும் அந்த சிறுவனை மிரட்டி இருக்கிறான்.

முதலில் அந்தப் பெண்ணிற்கு தன்னை மிரட்டியது ஆறாம் வகுப்பு மட்டுமே படித்துக் கொண்டிருக்கும் சிறுவன் என்பது தெரியாமல் இருந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் அந்த சிறுவன் பெண்ணிடம் பணத்தையும் கேட்டு தொடர்ந்து மிரட்டி வந்துள்ளான். இவை அனைத்தையும் அவன் மெசேஜ் மூலம் அனுப்பியிருக்கிறான். இந்த மெசேஜை அந்தப் பெண் ஸ்கிரீன்ஷாட் ஆக தன்னுடைய மொபைலில் பதிவு செய்து வைத்திருக்கிறார். இந்த அச்சுறுத்தலை குறித்து தனது பெற்றோரிடம் கூற முடியாமல் தவித்து வந்த அந்த பெண்ணின் குழப்பத்தை அவளது பெற்றோர் கண்டறிந்திருக்கின்றனர்.

ஒருகட்டத்தில் செய்வதறியாது குழம்பிய அந்த பெண்ணிடம் அவரது பெற்றோர் நடந்த அனைத்தையும் பற்றி கூறுமாறு கேட்டுள்ளனர். முதலில் மறுத்த அவர் பின்னர் பெற்றோரின் வேண்டுகோளுக்கு இணங்க தனக்கு நேர்ந்த அநீதியை பற்றி கூறியிருக்கிறார் . இதனைக் கேட்ட பெற்றோர் முதலில் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் பொறுமையாக பேசி ஆலோசனை செய்து இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கலாம் என்று முடிவு செய்துள்ளனர். 

இதைத்தொடர்ந்து அந்த பெண் மற்றும் அவரது பெற்றோர் ஆகிய அனைவரும் இணைந்து அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு சென்று அந்தப் பெண்ணிற்கு மர்ம நபர் ஒரு இடம் இருந்து வந்த அழைப்புகளை பற்றி விளக்கமாகக் கூறி புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் கடந்த மே 17-ஆம் தேதி, அந்த சிறுவன் அந்த பெண்ணின் அதிகாரபூர்வ சமூக வலைதள பக்கத்திற்கு பெண்ணினுடைய மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களை அனுப்பி மிரட்டி இருக்கிறான். இதனால் அந்த பெண் மிகுந்த அதிர்ச்சியில் உறைந்து இருக்கிறார்.

இந்த சம்பவத்தை பற்றி காவி நகர் போலீசாரிடம் விளக்கமாக அந்த பெண் கூறியிருக்கிறார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் அந்த பெண்ணிற்கு வந்த மெசேஜ் மற்றும் செல்போன் அழைப்புகள் ஆகியவற்றை உற்று கவனித்து வந்துள்ளனர். அவர்களது முதற்கட்ட விசாரணையில் அந்த பெண்ணை மிரட்டி வந்தது 11 வயது மட்டுமே நிரம்பிய சிறுவன் என்பது தெரியவந்துள்ளது. காவிய நகர் காவல் நிலைய அதிகாரி அஸ்ஸம், அடையாளம் தெரியாத அந்த மர்ம நபர் மீது 507 மற்றும் 386 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருக்கிறார். இந்த சம்பவம் எதிர்கால சமுதாயத்தின் இன்றைய மனப்பாங்கை தெளிவாக காட்டுகிறது என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.