ப சிதம்ரபம் மிரட்டலுக்கு பணிந்தார் ராகுல்! சிவகங்கை காங்.,, வேட்பாளர் அறிவிப்பு!

ப சிதம்பரத்தின் மிரட்டலுக்கு பயந்து சிவகங்கை தொகுதியில் பசிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தையே வேட்பாளராக ராகுல் அறிவித்துள்ளார்.


ஒரு குடும்பத்திற்கு ஒருவர் தான் தேர்தலில் போட்டி என்கிற நிலைப்பாட்டை உடையவர் ராகுல் காந்தி. இதனால் ப சிதம்பரம் ஏற்கனவே மாநிலங்களவை எம்பியாக உள்ளதால் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு சிவகங்கை தொகுதியை ஒதுக்க ராகுல் தயங்கினார்.

அதே சமயம் சிவகங்கை தொகுதியில் போட்டியிட சுதர்சன நாச்சியப்பன் பெரும் முயற்சி மேற்கொண்டு வந்தார். தனது மகனை தவிர வேறு யாருக்கு சீட் கொடுத்தாலும் சிவகங்கை தொகுதியில் வெற்றி பெற முடியாது என்று மேலிடத்திற்கு பசிதம்பரம் தகவல்களை அனுப்பினார்.

வேறு ஒருவரை வேட்பாளராக அறிவிக்கும் பட்சத்தில் பசிதம்பரம் உள்ளடி வேலைகளை பார்க்க கூடும் என்று அஞ்சிய ராகுல் சிவகங்கை வேட்பாளராக ப சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தையே அறிவித்துள்ளார்.

கார்த்தி சிதம்பரம் நாளை வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். கடந்த முறை சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டியிட்டு தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.