முதல்ல என் படத்தை முடிங்க! அப்புறம் ரஜினிட்ட போங்க! சீறிய சூர்யா! அதிர்ந்த சிறுத்தை சிவா! கோடம்பாக்க பஞ்சாயத்து!

இயக்குனர் சிறுத்தை சிவா, நடிகர் சூர்யாவை வைத்து புதியதாக திரைப்படம் ஒன்றை இயக்க உள்ளதாக தகவல்கள் சமீபத்தில் வெளியாகின.


ஆனால் தற்போது சிறுத்தை சிவா சூர்யாவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்ட திரைப்படத்தை இயக்குவதை கைவிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் புதிய திரைப்படத்தை இயக்கலாம் என முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இயக்குனர் சிவா சிறுத்தை திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருந்த போது தயாரிப்பாளர்  ஞானவேல்ராஜா சார்பில் ஒரு திரைப்படம்  இயக்க வேண்டும் என்று ஆலோசித்தனர். 

இதே சமயத்தில் சிறுத்தை சிவா  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் ஒரு கதை  கூறியிருக்கிறார் . அந்த படத்தில் சூப்பர் ஸ்டாரை நடிக்கவும் அழைத்துள்ளார் . ஆனால் அவரோ இதற்கான எந்த பதிலும் தெரிவிக்காமல் சிறிது காலம் காத்திருங்கள் என்று கூறியிருக்கிறார்.

இதனையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் இருந்து எந்த ஒரு பதிலும் வராத காரணத்தினால் சிறுத்தை சிவா மீண்டும் ஞானவேல்ராஜா உடன் இணைந்து நடிகர் சூர்யாவை வைத்து திரைப்படம் இயக்க வேண்டும் என முடிவு செய்துள்ளார். 

ஒருவகையில் இந்த திரைப்படமானது உறுதி செய்யப்பட்டு நடிகர் சூர்யாவின் கால்ஷீட் சிறுத்தை சிவா பெற்றுவிட்டார் . இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் இருந்து சிறுத்தை சிவாவுக்கு அழைப்பு வந்துள்ளது . அவர் தற்போது சிறுத்தை சிவாவுடன் இணைந்து திரைப்படத்தில் நடிப்பதற்கு தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

இதனை கேட்ட சிறுத்தை சிவாவுக்கு  மகிழ்ச்சி பொங்கி உள்ளது .ஏனெனில்  சூப்பர் ஸ்டாரை வைத்து படம் இயக்குவது அவ்வளவு எளிதல்ல . அவருடைய கால்ஷீட் பெறுவது என்பது மிகவும் கடினமான செயல் என்பதை  நன்கு அறிந்தவர் சிவா.

இருப்பினும் இவர் நடிகர் சூர்யாவுக்கு அளித்த வாக்கை காப்பாற்ற வேண்டும். தற்போது இவர் ரஜினிகாந்தை வைத்து படம் எடுப்பாரா அல்லது நடிகர் சூர்யாவிற்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுவாரா என்பது கேள்விக்குறியாகியுள்ளது .

இந்தத் தகவலை அறிந்த நடிகர் சூர்யா, இயக்குனர் சிவாவிடம்  முதலில்  என்னுடன் ஒப்பந்தம் செய்யப்பட்ட திரைப்படத்தை முடித்துவிட்டு, பின்னர்  சூப்பர் ஸ்டாரை வைத்து படம் இயக்கி கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார். சிறுத்தை சிவாவின் முடிவு  சூப்பர் ஸ்டார் பக்கமோ அல்லது சிங்கத்தின் பக்கமா என்று பொறுத்திருந்து பார்ப்போம் !!