காதலர் தின ஸ்பெசலாம்! கரு கரு கரி தோசை! முரட்டு சிங்கிள்சை புற்று நோயாளி ஆக்கும் அடையார் ஆனந்த பவன்!

காதலி இல்லாமலும், இன்னும் திருமணம் ஆகாமல் தவித்து வரும் சிங்கிள் பசங்க சாப்பிடுவதற்காக புதுவிதமான தோசை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


சமூக வலைத்தளங்களில் 80s கிட்ஸ் மற்றும் 90s கிட்ஸ் என்று பல்வேறு வகையான மீம்களால் அந்த காலத்தில் பிறந்த ஆண்கள் கலாய்க்கப்பட்டு வருகின்றனர். எப்படியும் திருமணம் ஆகி விடவேண்டும் என்ற நம்பிக்கையுடன் தங்கள் வாழ்க்கை முழுவதையும் முரட்டு சிங்கிளாக செலவழித்து வருவதாக பல்வேறு மீம்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதனை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் வகையில், தமிழ்நாட்டின் இயங்கி வரும் புகழ் பெற்ற உணவக நிறுவனமான "ஏ 2 பி" புதிதாக "சார்கோல் தோசை" என்ற தோசையை அறிமுகப்படுத்தியுள்ளது. காதல் இல்லாதவர்களும், திருமணமாகாதவர்களும் இந்த சார்கோல் தோசையை சாப்பிட வேண்டும் என்று அந்த நிறுவனம் மார்க்கெட்டிங் செய்து வருகிறது.

தோசை மாவில் கரித்தூளை தூவி, நன்றாக வெந்த பின்னர் நெய்யூற்றி கார்பன் பேப்பர் போன்று இந்த தோசையை தயாரித்து வருகின்றனர். முரட்டு சிங்கிளாக இருப்பவர்கள் இந்த தோசை மூலம் காதலர் தினம் குறித்த தங்களுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி கொள்ள இயலும் என்று பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிக்கின்றனர்.

காதலர் தினத்தன்று பறக்கவிடப்படும் சிவப்புநிற இதய பலூன்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த தோசை வடிவமைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. 2 நாட்களில் கிட்டத்தட்ட 1500 தோசைகள் விற்கப்படுவதாக கூறப்படுகிறது.

எனினும் இந்த தோசையில் இருக்கக்கூடிய அபாயங்கள் குறித்து உணவு பராமரிப்பு துறை எச்சரிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முதலில் இந்த தோசையை உட்கொள்ளும் போது வயிற்றுப்போக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், தொடர்ந்து சாப்பிட்டால் ஒரு கட்டத்தில் புற்று நோயும் ஏற்படக்கூடும் என்று அதிகாரிகள் விழிப்புணர்வு மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கனவே கல்யாணம் ஆகாமல் தவிக்கும் இளைஞர்கள் உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுமோ என்ற அச்சத்தில் இந்த தோசையை பார்ப்பதாக பல சமூக வலைத்தளங்களில் கமெண்ட் செய்துள்ளனர்.

இந்த தோசையானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.