ஓடும் காரில் பாலியல் வன்புணர்வு! பிறகு தூக்கி வீசப்பட்ட கொடூரம்! லிஃப்ட் கேட்ட இளம் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!

ஓடும் காரில் 19 வயது இளம்பெண்ணை மர்ம நபர்கள் இழுத்துச் சென்று பலாத்காரம் செய்துள்ளனர்.


ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஷிம்லா நகரில், கடந்த ஞாயிறு இரவு , மால் ரோடு பகுதியில் இருந்து தாலி பகுதிக்கு, 19 வயது இளம்பெண் நடந்து சென்றுள்ளார். அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி இளம் பெண் லிஃப்ட் கேட்டுள்ளார். காரில் இருந்த சில மர்ம நபர்கள்,  அவருக்கு லிஃப்ட் தருவது போல பேசி, அவரை காரில் ஏற்றியுள்ளனர்.

இதன்பின், ஓடும் காரில், இந்த பெண்ணை, கதற கதற பலாத்காரம் செய்துவிட்டு, சிறிது தொலைவில் கீழே தள்ளிவிட்டு, சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. உடனடியாக, அந்த இளம்பெண், அவசர உதவி மையத்தை தொடர்பு கொண்டு, இதுபற்றி புகார் கூறியுள்ளார்.

இதையடுத்து, இளம்பெண்ணிடம் வாக்குமூலம் பதிவு செய்த போலீசார், அவர் பலாத்காரம் செய்யப்பட்டார் என்பதற்கான மருத்துவ பரிசோதனை செய்து, உறுதிப்படுத்தினர். தற்போது, இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 376, 354 மற்றும் 506 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிந்து, மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.