கல்யாணம் ஆகி 8 வருசம் ஆச்சு..! இன்னும் ஏன் கர்ப்பமாகவில்லை? மனைவிக்கு கணவனால் ஏற்பட்ட பயங்கரம்!

பல வருடங்களாக குழந்தை பிறக்காதா ஆத்திரத்தில் கணவர் மனைவியை கொலை செய்த சம்பவமானது ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் மல்கபுரம் எனுமிடம் அமைந்துள்ளது. இப்பகுதியை சேர்ந்த நாகஜோதி என்பவரை சோமசேகர் என்பவர் 2012-ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். நாகஜோதியின் வயது 26. பல ஆண்டுகளாக இருவருக்கும் குழந்தையில்லை.

இதனிடையே நாகஜோதி மீது சோம சேகர் தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தி வந்தார். இதனால் வருத்தமடைந்த நாகஜோதி கணவரிடமிருந்து பிரிந்து தன்னுடைய தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

ஒரு மாதத்திற்கு முன்னர் ஊர் பெரியவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி ஒன்று சேர்த்து வைத்தனர். 3 வருடங்களுக்கு பிறகு இருவரும் ஒன்றாக வாழ தொடங்கினர். ஆனால் அப்போதும் கணவன் மனைவியிடையே சமாதானம் ஏற்படவில்லை. தொடர்ந்து இருவருக்குள்ளும் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு வந்துள்ளன.

சில நாட்களுக்கு முன்னர் இருவருக்குள்ளும்  வாக்குவாதங்கள் ஏற்பட்டுள்ளன. வாக்குவாதங்கள் முற்றிப்போய் கைகலப்பாகியது. ஆத்திரமடைந்த சோமசேகர் நாகஜோதி கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டார்.

பின்னர் தற்கொலை நாடகம் ஆடுவதற்காக நாகஜோதி உடலை கயிற்றில் கட்டி மின்விசிறியில் தொங்கவிட்டிருந்தார். சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்தனர். 

சம்பவயிடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சேகரிடம் விசாரணையை மேற்கொண்டனர். காவல்துறையினரின் துரிதமான விசாரணைக்கு பதிலளிக்க இயலாத சேகர், நாகஜோதியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். வாக்குமூலத்தைப் பெற்றுக்கொண்ட காவல்துறையினர் தீவிர விசாரணை ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சம்பவமானது ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.