29 வயது பெண்மணியை வழி மறித்து 15 வயது சிறுவன் பலாத்காரம்! கடலூர் திட்டக்குடியில் அதிர்ச்சி சம்பவம்!

மூத்த அக்காள் வயதுள்ள பெண்ணை வழிமறித்து 15 வயது சிறுவன் பாலியல் தொல்லை கொடுத்த அதிர்ச்சிகர சம்பவம் கடலூர் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.


கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள பெரியார் நகரில் சுமார் 29 வயது பெண் வசித்து வருகிறார். இவர் வீட்டில் கழிப்பிட வசதி இல்லாததால் இயற்கை உபாதைகளுக்கு தோட்டத்துக்கு பக்கம் செல்வது வழக்கம். கடந்த 2 நாட்களுக்கு முன்னர் வழக்கம்போல் இயற்கை உபாதை கழிக்க தோட்டத்து பக்கம் சென்றபோது 15 வயது சிறுவன் பின்னாடியே சென்றுள்ளார். பின்னர் அந்த பெண்ணை வழிமறித்தான்.

இதையடுத்து சற்றும் யோசிக்காமல் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளான். இதனால் அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார். ஐயோ அம்மா என அலறிக்கொண்டு ஓடி வந்துள்ளார். இந்த விஷயத்தை கணவரிடம் சொல்ல உடனடியாக திட்டக்குடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் 15 வயது சிறுவனை அழைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்ததை ஒப்புக் கொண்டான் அந்த சிறுவன்.

இதையடுத்து சிறுவனை கைது செய்த போலீசார் கடலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்த இல்லத்தில் ஒப்படைத்தனர். இணையதளங்களிலும் சினிமாக்களிலும் வரும் நடிகைகளின் ஆபாசக் காட்சிகளை பார்க்கும் சிறுவர்கள் இதுபோன்ற அற்பத் தனமாக செயல்களை செய்து வாழ்க்கையை தொலைத்து விடுகின்றனர்.