பண்ணை வீட்டில் பாலியல் தொழில்! விபச்சார பெண்களிடம் சிக்கிய காண்டம், கர்ப்பத்தடை மாத்திரை! எங்கு தெரியுமா?

கிரேட்டர் நொய்டா விருந்தினர் மாளிகையில் பாலியல் மோசடியில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.


நிலவிவரும் ஊரடங்கு உத்தரவால் ஹோட்டல்கள் மற்றும் லாட்ஜ் ஆகியவற்றை மூடும்படி அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதனையடுத்து பாலியல் தொழில் செய்பவர்கள் போலீசுக்கு தெரியாமல் திருட்டுத்தனமாக இந்த தொழிலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது கிரேட்டர் நொய்டா விருந்தினர் மாளிகையில் பாலியல் மோசடியில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் உட்பட ஆறு பேரை போலீசார் அதிரடியாக கைது செய்து அவர்களின் மீது பாலியல் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அதாவது விருந்தினர் மாளிகையில் அரசாங்க அறிவிப்பையும் மீறி யாருக்கும் தெரியாமல் பாலியல் தொழில் நடைபெற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் போலீசார் அந்த மாளிகையை அதிரடியாக சோதனை செய்தனர். துணை ஆணையர் ராஜேஷ் குமார் சிங் தலைமையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சோதனையின்போது சம்பவ இடத்தில் இருந்த 6 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இதில் 2 பெண்களும் அடக்கம்.

மேலும் அந்த இடத்திலிருந்து ரூ .12,600 பணம், செல் போன்கள், மேக்கப் கிட்கள், ஆணுறைகள் மற்றும் கருத்தடை மாத்திரைகள் உட்பட பல பொருட்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர். இதனைத் தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்ட அவர்களின் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.