திருமணமான 4 வருடங்களுக்கு பிறகு கர்ப்பம்..! இனிய இருமலர்கள் ஆலியா வெளியிட்ட புகைப்படம்..!

இனிய இரு மலர்கள் தொலைக்காட்சி ஆலியா கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ஷிகா சிங் ஷா, தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவி வருகிறது.


கும்கம் பாக்யா", "இடது வலது இடது" மற்றும் "சசுரல் சிமர் கா" போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றதன் மூலமாக பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை ஷிகா சிங் ஷா. பொதுவாகவே நடிகர் நடிகைகளின் வீட்டில் ஏதாவது விசேஷம் என்றால் அது ரசிகர்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்க்கும். அப்படியாகத்தான் நடிகை ஷிகா சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினார். இதனை அறிந்த அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறிய வண்ணம் இருந்தனர்.

இந்நிலையில் நடிகை ஷிகா மேலும் ஒரு புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த புகைப்படத்தில் தன்னுடைய கணவர் மற்றும் தன்னுடைய செல்லப்பிராணி உடன் இணைந்து காட்சியளிக்கிறார். மேலும் அந்த புகைப்படத்தில் குழந்தையை சுமக்கும் அவரது வயிற்றைக் காண்பித்து போஸ் கொடுத்திருக்கிறார். மேலும் கேப்ஷனாக, இது எல்லாம் பிளாக் & ஒயிட் # குட் டைம்ஷெட் # வெயிட்டிங் # பாசிடிவ்விப்சன்லி # பெஸ்ட்ராங் # ஸ்டேஸாஃப் # ஸ்டேஹெல்தி # ஸ்டேஹோம்" குறிப்பிட்டு இருக்கிறார். இந்த புகைப்படம் வெளியான சில மணி நேரங்களிலேயே பல லட்சக்கணக்கான லைக்குகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

திருமணத்திற்குப் பின்பும் பிஸியாக சீரியலில் நடித்து வந்த இவர் பல ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றதன் மூலம் பிரபலமான நபராக வலம் வருகிறார். அதிலும் குறிப்பாக இவர் நடித்த சீரியலின் தமிழ் ரீமேக்கான இனியஇருமலர்கள் சீரியலில் ஆலியா என்ற கதாபாத்திரத்தில் நடிகை ஷிகா நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் தமிழ் ரசிகர்களாலும் வெகுவாக கவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.