சேனல்ல இருந்து மறுபடியும் கூப்டாங்க..! சரினு ஓகே சொல்லிட்டேன்..! அழகு சீரியல் காவியா எடுத்த முடிவு!

அழகு சீரியலில் மீண்டும் நடிக்க உள்ள இளம் நடிகை ..யார் தெரியுமா ?


பிரபல தமிழ் தொலைக்காட்சியான சன் டிவியில் தினம் தோறும் மாலை ஆறு முப்பது மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் அழகு மெகா தொடரில் காவியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சஹானா. மெகா தொடரில் சீனியர் நடிகையான ரேவதி தலைவாசல் விஜய் போன்றோரும் நடித்து வருகின்றனர்.

சீரியலில் தனக்கு முக்கியமான கதாபாத்திரம் அமையாததால் சீரியலை விட்டு விலகப் போவதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடிகை சஹானா கூறியிருந்தார். ஆனால் தற்போது மீண்டும் அழகு மெகா தொடரில் நடித்து வருவதாக கூறியிருக்கிறார் நடிகை சஹானா.

இந்த திடீர் மாற்றத்திற்கான காரணம் என்ன என்று சஹானாவிடம் கேட்டபோது, என்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அழகு மெகா தொடரில் கிடைக்கவில்லை என்பதால் தான் சீரியலை விட்டு விலகியே இருந்தேன் . ஆனால் தற்போது சேனலில் இருந்து என்னை தொடர்பு கொண்டு இனி உங்களுக்கு முக்கியத்துவம் தரும் விதமாக கதை அமைக்கப்படும் எனவும் மறுபடியும் நீங்கள் படப்பிடிப்புக்கு செல்லுங்கள் எனவும் கூறியிருந்தனர்.

சீரியலில் மிகவும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துவரும் என்னுடைய பிரச்சனையை தீர்ப்பதற்காக சேனல் இத்தகைய நடவடிக்கை எடுக்கும் போது அவர்களுக்கு மரியாதை கொடுப்பதுதான் நல்லது என்று எனக்கு தோன்றியது. ஆகையால் மீண்டும் அழகுசீரியல் நடிப்பதற்கு ஒப்புக் கொண்டேன் என்று சஹானா கூறியிருந்தார். இதன்மூலம் சீரியலை விட்டு விலகிய ஒரு நடிகை அதே சீரியலில் மீண்டும் இணைவது இதுவே முதல் முறை என்றும் கூறலாம்.