எப்படி இருந்த என் உடல் இப்படி ஆயிடிச்சி..! புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை அதிர வைத்த செம்பருத்தி வனஜா..!

செம்பருத்தி சீரியலில் வனஜா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை லட்சுமி தன்னுடைய உடல் எடையை வெகுவாக குறைத்து அதனை புகைப்படமாக எடுத்து தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார்.


சென்னையில் பிறந்து வளர்ந்த நடிகை லக்ஷ்மி, 2003 முதல் திரைப்படங்கள் மற்றும் சீரியல் உள்ளிட்டவைகளில் நடித்து வருகிறார். இவர் இயக்குனர் பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான பார்த்தாலே பரவசம் திரைப்படத்தின் வாயிலாக சினிமா துறைக்குள் நுழைந்தார். இயக்குனர் பாலச்சந்தர் அறிமுகப்படுத்திய பல நடிகர் நடிகைகளில் இவரும் அடங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகை லட்சுமி இரட்டைவால், வில்லம்பு, மன்னவன் வந்தானடி போன்ற திரைப்படங்களிலும் நடித்து இருக்கிறார்.

அதிலும் குறிப்பாக ரெட்டை வாலு திரைப்படத்தில் இவரது கதாபாத்திரம் ரசிகர்களால் பெரிதும் கவரப்பட்டு என்றே கூறலாம். தற்போது நடிகை லட்சுமி, ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் இவரது பெயர் வனஜா. லக்ஷ்மி என்று இவர் அறியபட்டதைவிட செம்பருத்தி சீரியல் வனஜா என்றுதான் பலராலும் அறியப்படுகிறார் என்பது குறிப்பிடதக்கது. அந்தளவிற்கு இந்த கதாபாத்திரத்தின் மூலமாக ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் நடிகை லட்சுமி.

சமீபகாலமாகவே அவர் உடல் எடை அதிகரித்து காட்சியளித்தார். ஆனால் தற்போது நிலவி வரும் ஊரடங்கால் வீட்டிலேயே இருக்கும் அவர் தன்னுடைய உடல் எடையை வெகுவாக குறைத்து அதைப் புகைப்படமாக வெளியிட்டு இருக்கிறார். சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் ஆச்சரியமடைந்து உள்ளனர். மேலும் சிலர் எப்படி உங்கள் உடல் எடையை குறைத்தீர்கள்? என கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் சிலர் எங்களுக்கு உடல் எடையை குறைப்பதற்கான டிப்ஸ் சொல்லுங்கள்.. என்றும் கூறியுள்ளனர். நடிகை லட்சுமி வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர்.