ஆட்சிக்கு வரும் முன்னரே மணல் கொள்ளைக்கு ஆதரவு கொடுக்கும் செந்தில்பாலாஜி..!

தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் வன்முறை அதிகரிக்கும், இயற்கை கொள்ளையடிக்கப்படும் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றுதான். அந்த ரகசியத்தை வெளிப்படையாகப் போட்டு உடைத்திருக்கிறார் செந்தில்பாலாஜி.


கரூர் தொகுதியின் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, பொதுமக்களிடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அவர், ‘ஸ்டாலின் 11 மணிக்கு முதலமைச்சராக பதவியேற்ற பிறகு, அடுத்த 5வது நிமிடத்தில் மாட்டு வண்டிகளை ஆற்றை நோக்கி விடுங்கள். எந்த அதிகாரிகள் உங்களை தடுக்கிறார்கள் என்று பார்க்கலாம். அப்படி தடுத்தால் என்னை அழையுங்கள். பிறகு அந்த அதிகாரி இருக்க மாட்டார்’ என்று ஆணவமாகப் பேசினார்.

செந்தில் பாலாஜியின் இந்தப் பேச்சிற்கு அதிமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி மீது பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தேர்தல் ஆணையத்திற்கு புகார் மனு அனுப்பியுள்ளார். அந்தப் புகார் மனுவில், அரசு அதிகாரிகளுக்கு வெளிப்படையாக கொலை மிரட்டல் விடுத்த திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

ஒருவேளை இந்த மனுவின் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தால், செந்தில் பாலாஜி தேர்தலில் போட்டியிடுவது கேள்விக் குறியாகும் என்று சொல்லப்படுகிறது