என் பாடி லாங்வேஜ் உங்களை படுக்கைக்கு கூப்பிட்டது போல் இருக்கிறதா? சீனியர் காமெடி நடிகரிடம் கேட்ட சீனியர் நடிகை!

பிரபல சீனியர் நடிகை பிரகதி தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்த முன்னணி காமெடி நடிகரிடம் என் பாடி லாங்குவேஜ் உங்களைப் படுக்கைக்கு கூப்பிட்டது போல் இருந்ததா? என கண்டபடி விலாசியதாக தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை சமீபத்தில் பங்கேற்ற பேட்டி ஒன்றில் பகிர்ந்திருக்கிறார்.


கடந்த 1994ஆம் ஆண்டு நடிகர் பாக்யராஜ் கதாநாயகனாக நடித்து இயக்கிய வீட்ல விசேஷங்க திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரகதி ஆவார். அதன் பிறகு பெரியமருது, ஜெயம் , சிலம்பாட்டம், தோனி , தாரை தப்பட்டை போன்ற திரைப் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற பல்வேறு மொழிப் படங்களிலும் நடித்து பிரபலமானார். 

பொதுவாகவே இவர் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஆவார். சமீபத்தில் அவரும் அவரது மகனும் இணைந்து நடனமாடிய வீடியோ சமூக வலைத்தளத்தில் டிரெண்ட் ஆனது. சீனியர் நடிகை பிரகதி சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர் பல சுவாரஸ்யமான தகவல்களையும் படப்பிடிப்பின்போது தனக்கு ஏற்பட்ட மறக்க முடியாத அனுபவங்கள் பலவற்றையும் பற்றி பகிர்ந்து கொண்டார். அப்போது சீனியர் நடிகை பிரகதி இடம் முன்னணி காமெடி நடிகர் ஒருவர் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்ததை பற்றி கேட்கப்பட்டது.

அதற்கு அவர் , அந்த முன்னணி காமெடி நடிகர் என்னிடம் தவறாக முயற்சி செய்தது உண்மைதான். அதாவது அவர் மூத்த காமெடி நடிகராக வலம் வருகிறார். நானும் அந்த மரியாதையுடன் அவருடன் நட்பாக பழகி வந்தேன். ஒரு படப்பிடிப்பின் பொழுது இருவரும் சேர்ந்து நடித்து இருந்தோம். படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த நாட்களில், திடீரென ஒருநாள் அவர் மீது எனக்கு சந்தேகம் எழுந்தது. அவருடைய நடவடிக்கைகள் சற்று வித்யாசமாக எனக்கு தெரிந்தது. அநாகரிகமாக இருந்த அவரது பேச்சும் நடவடிக்கையும் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவரது பேச்சும் நடவடிக்கையும் பொறுத்துக்கொண்டு அந்த இடத்திலேயே இருந்தேன்.

பின்னர் அதே நாள் மாலை நேரத்தில் அந்த நடிகரை என்னுடைய கேரவனுக்கு அழைத்து சென்றேன். அவரிடம் உங்களுக்கு நான் ஏதாவது தவறான சிக்னல் அளித்தேனா? அல்லது என் பாடி லாங்வேஜ் உங்களை படுக்கைக்கு கூப்பிட்டது போல் இருக்கிறதா? என்று கேட்டேன். நான் சொன்னதைக் கேட்ட அந்த நபர் பதில் கூற முடியாமல் தலை குனிந்து அவமானப்பட்டார். பின்னர் அவரிடம் படப்பிடிப்பின் போது என்னிடம் நீங்கள் பேசிய வார்த்தைகள் தகாத முறையில் நடந்தது. என்னால் அங்கே உங்களை கண்டபடி திட்டி இருக்க முடியும் ஆனால் அது உங்களுக்கு அவமானத்தைத் தேடித் தரும் என்பதால் நான் அமைதியாக இருந்தேன் . என்னால் உங்களுடைய இமேஜ் கெட்டுப் போகக்கூடாது என்பதற்காகத்தான் நான் அமைதியாக இருந்தேன் எனவும் நடிகை பிரகதி கூறியிருக்கிறார் . 

இந்த சம்பவத்திற்கு பின்பு அந்த காமெடி நடிகர் தன்னிடம் தவறாக நடந்து கொள்ளவில்லை எனவும் நடிகை பிரகதி அந்த பேட்டியில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது நடிகை கூறியுள்ள இந்த செய்தி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது.